இந்திய அணிக்கு எதிராக விளையாடும் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13-ஆம் தேதி கொழும்புவில் தொடங்க இருந்த நிலையில்,  இலங்கை அணியைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், ஒரு நாள் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியைச் சேர்ந்த உதவியாளர் நிரோஷன், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளார் ஆகியோருக்கு டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை, இலங்கை மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்படாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 18, 20, 22 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதே போல, டி-20 போட்டிகள், ஜூலை 25, 27 மற்றும் 29 தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


Swimming olympian sajan prakash: ‛அவனுக்கு ஒரு நிரந்தர முகவரி தேவை....’ -சஜன் பிரகாஷ் தாய்


முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தஸீன் ஷனகா கேப்டனாக செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.






இலங்கை அணி விவரம்:


தஸீன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்ணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, சரீத் அஸலங்கா, வனின்டு ஹஸரங்கா, அஷென் பன்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லஷ்மன் சண்டகன், அகிலா தனஞ்செயா, ஷிரன் பெர்ணான்டோ, தனஞ்செயா லக்‌ஷன், இஷான் ஜெயவர்தனே, பிரவீன் ஜெயவிக்கிரமா, அஸிதா பெர்ணான்டோ, கஸீன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உடனா.


IRE vs SA: அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்... ரெக்கார்டுகளை தகர்த்த இரண்டு பேட்ஸ்மேன்கள்!