ஓரங்கட்டப்பட்ட ரோகித் சர்மா:


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அதிக விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கொடுத்த விளக்கத்துக்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பதிலடி கொடுத்தார்.


கேப்டன்சி:


முன்னதாக, ரோகித் சர்மா குறித்து மார்க் பவுச்சர் பேசுகையில், ‘ரோகித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து அகற்றி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது முழுக்க முழுக்க கிரிக்கெட் காரணங்களுக்காகவே. மும்பை இந்தியன்ஸ் அணிமாறும் கால கட்டத்தில்உள்ளது. இந்தியாவில் நிறைய பேருக்கு இது புரிவதில்லை. உணர்ச்சிபூர்வமாக அனைத்தையும் அணுகுகின்றனர். ஆனால் உணர்ச்சிகளை இதிலிருந்து அகற்றி விட வேண்டும். இது கிரிக்கெட் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு.


ரோகித் சர்மா இதன் மூலம் ஒரு வீரராக இன்னும் சிறப்பாக பங்களிப்புச் செய்ய முடியும். ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே கிரிக்கெட்டை விட பிற விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அதாவது போட்டோ ஷூட், விளம்பர நிகழ்ச்சிகள் என்று அமர்க்களப்படும். கிரிக்கெட் இங்கு இரண்டாம் பட்சம்தான். ரோகித் பற்றி நான் கூறுவதெல்லாம் அவர் ஓர் அருமையான வீரர். அவர் பல சீசன்களுக்கு கேப்டனாக இருந்து விட்டார். நன்றாகவும் செய்து விட்டார். இப்போது இந்திய அணியையும் வழிநடத்துகிறார்.


அடித்து ஆட வேண்டும்:


கடைசி 2 சீசன்களாக அவர் பேட்டிங்கில் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டனாக நன்றாகவே வழிநடத்தினார். மும்பை இந்தியன்ஸை ஒட்டுமொத்த குழுவாகக் கருதி கூறுகிறேன். ரோகித் சர்மா இன்னும் அவரது பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். கேப்டன்சி சுமை இல்லாமல் ரோகித் நன்றாக அடித்து ஆட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்திய அணியின் கேப்டனாக இருப்பதால் அவருக்கு ஹைப் அதிகம். அதோடு மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி சுமையும் சேர வேண்டாம். அவர் இறங்கும் போது கேப்டன்சி சுமை இல்லை என்றால் அவர் இன்னும் பேட்டிங்கை சிறப்பாகச் செய்ய முடியும். ரோகித் சர்மாவிடமிருந்து சிறப்பானவற்றை வெளிக்கொணர்ந்து மும்பை அணி பயனடைய வேண்டும் என்பதுதான்என்று கூறினார்.


எப்போதும் என் பக்கம் :


இதற்குப் பதிலடி கொடுத்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா, ‘’இதில் பல விஷயங்கள் தவறு என்று ஒற்றை வரியில் பதிலடி கொடுத்தார். இந்த பதிவு வைரலானது. இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது மனைவி ரித்திகாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, எப்போதும் என் பக்கம் இருப்பதற்கு நன்றி கூறியுள்ளார் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






முன்னதாக, கடந்த  2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியின்  கேப்டனாக ரிக்கி பாண்டிங்கிற்குப் பதிலாக ரோகத் சர்மா நியமிக்கப்பட்டார். ரோகத்தின் தலைமையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Fitness Icon Anil Kadsur: மாரடைப்பால் மரணமடைந்த ஃபிட்னஸ் நிபுணர் அனில் கட்சூர்.. என்ன ஆச்சு?


 


மேலும் படிக்க: IND vs ENG Tests: 13 வருடத்தில் முதல்முறை! முழு டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட்கோலி!