இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்  ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. தோள்பட்டையில்  ஏற்பட்டுள்ள காயம் கடுமையாக உள்ளதால் சில மாதங்கள் வரை ஷ்ரேயாஸ் ஓய்வில் இருக்க வேண்டுமென தகவல் வெளியாகியுள்ளது. 


ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 1 மாதமே உள்ள நிலையில், டெல்லி அணியை யார் வழிநடுத்துவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஸ்மித், அஸ்வின் மாதிரியான மூத்த வீரர்களுக்கு அந்த வாய்ப்பு செல்வதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. அதேநேரம் ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் பந்த் இடம் நிர்வாகம் நம்பிக்கை கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. 


அப்படி நடக்கும் பட்சத்தில் கோலிக்கு பிறகு மிக இளம் வயதில் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்றவர் என்ற சிறப்பை பந்த் பெறுவார்.