தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயங்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியான நாள் முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இப்படத்திலிருந்து "கண்டா வரச்சொல்லுங்க" பாடல் வெளியாகி யூ ட்யூப்பில் ஆறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாக கொண்டப்பட்டது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a >#Karnan</a> teaser <a >https://t.co/KFLrhQhmEW</a></p>— Dhanush (@dhanushkraja) <a >March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுவரை கர்ணன் திரைப்படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்த படத்தில் இருந்து வெளியான "பண்டாரத்தி புராணம்" என்ற பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படக்குழு அறிவித்ததைப்போல நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றது.