தமிழக அரசியல் களம் தனித்தன்மை வாய்ந்த பல வேட்பாளர்களையும் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் வாக்கு சேகரிக்கும் முறையையும் கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. பின்னோக்கி நடந்து வந்து வேட்பு மனு தாக்கல், ராஜாவை போல குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல். அதே போல தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பு, பாத்திரம் கழுவி கொடுத்து வாக்கு சேகரிப்பு என்று அனுதினம் பல வகையாக வேட்பாளர்களை நம்மால் பார்க்கமுடிகிறது. 


இந்நிலையில் மன்னர்குடியில் மனதை நெகிழவைக்கும் ஒரு வாக்கு சேகரிப்பு தற்போது அரங்கேறியுள்ளது. மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் திரு. காமராஜ் தீடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தற்போது அவருடைய மருத்துவம் பயிலும் மகன் வீடு வீடாக சென்று தந்தைக்காக வாக்கு சேகரித்து வருகின்றார்.  


இந்த சம்பவம் மன்னார்குடி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.