இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியை தன்வசமாக்கியது. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதில்லை என்கிற சாதனையை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று முறியடித்தது.


இந்த வெற்றியின் பின்னணியில் இருந்தது அந்த அணியில் துவக்க பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களை அடக்கி, ஆட்டம் காண வைத்த அவரது துல்லியமான பந்துவீச்சு தான் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியையும், இந்தியாவிற்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது. இளம் வீரரான ஷாகின் அப்ரிடியின் பந்து வீச்சை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது. அதற்கு காரணம், அதே மைதானத்தில் இந்திய அணியால் பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. ஆனால் அதே மைதானத்தில் தான் அடுத்தடுத்து இந்திய துவக்க விக்கெட்டுகளை அள்ளினார் ஷாகின் அப்ரிடி. 


இந்நிலையில் அப்ரிடியில் விக்கெட் எடுத்து ஆர்ப்பரிக்கும் போட்டோ ஒன்றுடன் ஐசிசி வெளியிட்ட பதிவு பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஷாகித் அப்ரிடியின் ஜெர்ஸி எண்ணான 10 ம் நம்பரை தான் ஷாகின் அப்ரிடியும் அணிந்திருந்தார். அதை வைத்து அதே எண்... அதே பெயர்... புதிய சகாப்தம்... என ஐசிசி ஒரு ட்விட் போட, அதில் ஷாகின் அப்ரிடியும்-ஷாகித் அப்ரிடியும் ஒரே மாதிரி ஆர்ப்பரிப்பது போல ஸ்டில் போடப்பட்டிருந்தது.






அதை அப்படியே தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள அப்ரிடி, ‛அதே கொண்டாட்டம்... அதே இடம்... முடிவு வேறு... சிறப்பான ஆட்டம் அணியினரே...’ என தன்னுடைய ரீட்விட்டில் பதிவிட்டுள்ளார், ஷாகித் அப்ரிடி. இந்த பதிவு தற்போது பாகிஸ்தான் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.





ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் தான் ஷாகின் அப்ரிடியும் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளராக வலம் வர வாய்ப்புள்ளது உள்ளது.