ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டத்தில் தனது இரண்டு மாத குழந்தை தனது குடும்பத்தில் உள்ள யாரின் சாயலுடனும் இல்லை என்பதால் ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆனந்தப்பூர் மாவட்டதைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் தனது மனைவி சித்தம்மா மற்றும் தனது இரண்டு மாத பெண் குழந்தையுடன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தார். மருத்துவரின் வருகைக்காக காத்திருந்தபோது குழந்தை அழத்தொடங்கியது. இதையடுத்து குழந்தையை சமாதானம் செய்வதாக வெளியே எடுத்துச் சென்றுள்ளார் மல்லிகார்ஜுனா. 


இந்நிலையில் பல மணிநேரம் கழித்தும் மல்லிகார்ஜுனா குழந்தையுடன் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சித்தம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கல்யாண்துர்க் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மல்லிகார்ஜுனா மற்றும் குழந்தையின் புகைப்படத்தை இணையம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இவர்கள் குறித்து விவரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு தெரிவித்தனர். தொடர்ந்து, மல்லிகார்ஜுனாவின் நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 




மல்லிகார்ஜுனா தனது இரண்டு மாத பெண்குழந்தையின் வாயில் டேப் வைத்து சுற்றி ஆனந்தப்பூரில் உள்ள ஒரு ஏரியில் வீசியதாக தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தை தன்னுடைய குடும்பத்தில் உள்ள யாரின் சாயலுடனும் இல்லாததால் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். மேலும் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார். 
இந்நிலையில் ஏரியில் வீசப்பட்ட குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மல்லிகார்ஜுனா கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
இரண்டு மாத குழந்தை ஏரியில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண