இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 


ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில்  இன்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்ற போட்டியில் இந்திய ஜோடிகளான சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியும், பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியும் மோதின.


ஏற்கனவே அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தின் டிசிரே-ஸ்குப்ஸ்கி ஜோடியை கடுமையான போராட்டத்திற்கு பிறகு வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில்  7-6(2), 6-2 என்ற கணக்கில் லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 






இதுவே சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். வரும் பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற போவதாக ஏற்கனவே அறிவித்த சானியா மிர்சா கடைசியாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார்.  சானியாவின் கடைசி  கிராண்ட்ஸ்லாம் போட்டி தோல்வியில் முடிவடைந்ததால், அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். 


தனது ஆறாவது வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய சானியா,  2003 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். ஜூனியர் வீரராக பத்து ஒற்றையர் மற்றும் 13  இரட்டையர் பட்டங்களை வென்ற சானியா மிர்சா 2003 ஆம் ஆண்டு 2003 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன் போட்டியில் இரட்டையர் பட்டத்தை,அலிசா கிளேபனோவாவுடன் இணைந்து வென்றார். 


கிட்டதட்ட 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் சானியா மிர்சா கேரியரில் இது 11வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியாகும். அவர் மொத்தம் 43 முறை இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார்.  மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் கிட்டதட்ட  91 வாரங்களுக்கு நம்பர் 1 வீராங்கனையாக இருந்தார்.


இந்நிலையில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் உரையாற்றிய சானியா மிர்சா, எனது தொழில் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கிய நிலையில்,  எனது கிராண்ட்ஸ்லாம்  வாழ்க்கையை முடிக்க இதைவிட சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என கண்கலங்கியபடி தெரிவித்தார்.