Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கியுள்ளது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 292.76 புள்ளிகள் குறைந்து 59,912.30 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 79.90 புள்ளிகள் குறைந்து 17,812.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச்சந்தையானது பலத்த அடிவாங்கி உள்ளது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடியானது 18,000 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஏசியன் பையின்ட்ஸ், கோடக் மகேந்திரா, டெட்டன் கம்பெணி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், கோல் இந்தியா, பிபிசிஎல், அல்ட்ரா டெக் சிமெண்ட், கிராசிம், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, சிப்ளா, எம்எம், டாடா ஸ்டீல்,ஹின்டல்கோ, பஜாஜ் பின்சர்வ், லார்சன், இன்போசிஸ், பிரிட்டானியா, சன் பார்மா, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
என்ன காரணம்?
இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியுள்ளது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் வரவிருக்கும் பட்ஜெட் 2023 பற்றிய எதிர்பாப்புகள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 81.52 ரூபாயாக உள்ளது.