கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லி காவல்துறை சார்பில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில், சாகர் தங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் மீது பல வன்முறை வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 


மே 5, 2021 அன்று ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் தங்கர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, சத்ரசல் ஸ்டேடியம் அருகில் சுஷில் குமார் , குரைக்கும் நாய்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து, தடகள வீரர்களிடம் தனது கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் அந்த துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சுஷில் குமார் பாதுகாவலர் அனில் திமான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ரோகினி நீதிமன்றத்திலும் காவல்துறையினர் இந்த தகவல்களை முன்வைத்துள்ளனர். அவர்கள் டெல்லி காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், அனில் திமான் ஏப்ரல் 2019 முதல் சுஷிலுடன் பணிபுரிவதாகவும், மைதானத்தில் குரைக்கும் நாய்களை சுஷில் துப்பாக்கியால் சுட்டபோது அவர் உடனிருந்ததாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். அன்று இரவு (மே 4-5, 2021) சுஷில் 'நிறைய பேருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்' என்று பலரை ஸ்டேடியத்திற்கு அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 




தொடர்ந்து அன்று இரவு, சுஷில் மற்றும் அவரது உடன் இருந்த நாங்களும் ஷாலிமார் பாக் சென்று, சுஷிலின் அறிவுறுத்தலின் பேரில் மல்யுத்த வீரர்கள் அமித் மற்றும் ரவீந்தர் ஆகியோரைத் தாக்கியதாக குற்றப்பத்திரிகையில் திமான் கூறியுள்ளார். "ஸ்டேடியத்தில், நாங்கள் அவர்களை கடுமையாக தாக்கினோம். பின்னர் நாங்கள் மாடல் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்றோம், அங்கு நாங்கள் சாகர், ஜெய் பகவான் மற்றும் சோனுவை கடத்தி ஸ்டேடியத்திற்கு அழைத்துச் சென்றோம், ”என்றும் தெரிவித்துள்ளார். 


அதேபோல், சுஷில் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக ராகுல் என்ற மற்றொரு துணை குற்றவாளியும் தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாக்குமூலத்தில், மல்யுத்த வீரர்கள் சிலர் தன்னைக் கண்காணித்து, தனது வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் குறிப்பதால் கோபமடைந்த சுசில் குமார்,"நான் எங்கு செல்கிறேன், யாரை சந்திக்கிறேன், என்ன சாப்பிடுகிறேன், இந்த தகவல்களை சோனு மஹால் உள்ளிட்ட சில மல்யுத்த வீரர்கள் சாகர் மற்றும் ஜெய்பகவானிடம் சொல்லுகிறார்கள்.


இதையடுத்து, கடத்திவந்த மல்யுத்த வீரர்களை லத்தி, குச்சிகள், ஹாக்கி ஸ்டிக்ஸ் மற்றும் பேஸ்பால் மட்டையால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், “சாகரையும் ஜெய்பகவானையும் கொல்வதே எங்களின் நோக்கமாக இருந்தது. அதனால் அவர்களை தாக்கும்போது உயிருடன் விடாதீர்கள், கொடூரமாக தாக்கவும் என்று சுசில் குமார் கூறியதாக திமான் அளித்த வாக்குமூலத்தில் டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 


முன்னதாக, கடந்த மே 24 அன்று தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீரர் சாகர் தன்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷில் குமார் மற்றும் 18 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை. இவர்களின் மீது பிரிவுகள் 302 (கொலை), 308 (குற்றமில்லா கொலை), 365 (கடத்தல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 341 (தவறானது) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தது.


அதேபோல், (கட்டுப்பாடு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 506 (குற்றவியல் மிரட்டல்). இது IPC இன் பிரிவுகள் 188 (அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல்), 269 (நோய் தொற்று பரவக்கூடிய அலட்சிய செயல்), 120-B (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் ஆயுதங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண