திமுகவை இந்துக்களுக்கு எதிரி போன்று சித்தரித்து மாயத் தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கின்றனர் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், தமிழ்நாடு அரசு நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால், கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் பொங்கல் தினமான 14-ந் தேதி முதல் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் மட்டுமின்றி தைப்பூசம் தினமான 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முருகன் ஆலயங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தாண்டு அதை தவிர்ப்பதற்காக தைப்பூச தினத்திலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதி நடைபெறும்.. மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. முழு விவரம்..


இதை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததற்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், “திமுகவை இந்துக்களுக்கு எதிரி போன்று சித்தரித்து மாயத் தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கின்றனர். திமுக ஆட்சியில் கோயில்களில் முறையான, நேர்மையான நிர்வாகம் நடைபெறுகிறது” என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


கொரோனா, ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த வியாழன் முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால், பொங்கல் பண்டிகையை கடந்து இந்த மாத இறுதிவரை (ஜனவரி 31) வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேலும் படிக்க: Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண