மருத்துவ உதவி செய்த சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் தனது குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்வது போன்றவற்றை செய்து வந்தார். இதனிடையே தனது சச்சின் டெண்டுல்கர் பவுண்டேஷன் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகளையும் அவர் செய்து வருகிறார். அந்த வகையில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தகளுக்கு ஆதாரவு அளிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ளார்.
மீண்டும் புன்னகையை ஏற்படுத்துவோம்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிரிக்கும் திறன். அது ஒரு பரிசாக கொடுக்கப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். ஒரு சிலர், இந்த அடிப்படை உணர்ச்சியைக் கூட வெளிப்படுத்த அவர்கள் போராடுகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 குழந்தைகள் தங்கள் புன்னகையைத் தடுக்கும் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை, அன்னம், தாடை அறுவை சிகிச்சைகள் மூலம் குழந்தைகளின் முகத்தில் மீண்டும் புன்னகையை ஏற்படுத்த முயற்சிக்கும் அற்புதமான மருத்துவர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
”நாங்கள் ஆதரிக்கும் மையங்களில் ஒன்று ஸ்ரீநகரில் உள்ளது. எங்கள் ஜம்மு & காஷ்மீர் பயணத்தின் போது, நாங்கள் இங்கா ஹெல்த் ஃபவுண்டேஷனின் மருத்துவமனையில் நேரத்தை செலவிட்டோம். மருத்துவர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடினோம். அறுவைசிகிச்சை இந்த குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்ற கதைகளைக் கேட்பது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த குட்டி ஹீரோக்களை சந்தித்த பிறகு அஞ்சலி, சாரா மற்றும் நான் என அனைவரும் ஒன்றாக சிரித்தோம்.
அவர்களின் வாழ்க்கையில் இந்த அழகான மாற்றத்துக்கு பங்களித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், ரசிகர்கள் இவரது இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!