உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்துள்ளார். உலகிலே கால்பந்து ஆட்டத்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை ரொனால்டோ படைத்து அசத்தியுள்ளார். நேற்று இங்கிலாந்து நாட்டின் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் டோட்டன்ஹாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ பங்கேற்றார்.






இந்த போட்டியில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அதாவது ஹாட்ரிக் கோல் அடித்து ரொனால்டோ அசத்தினார். இந்த போட்டியில் ரொனால்டோ அடித்த மூன்றாவது கோல் அவரது புதிய சாதனைக்கான கோலாக பதிவானது. இதற்கு முன்பு ஆஸ்திரிய கால்பந்து வீரரான 1913ம் ஆண்டு பிறந்த ஜோசப் பைகன் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். ரொனால்டோ நேற்றைய போட்டி மூலம் கால்பந்து போட்டிகளில் 806 கோல்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.






பிபா-வின் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் உலகிலே அதிக கோல் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். அவர் மான்செஸ்டர் யூனைடட் அணிக்காக 135 கோல்களையும், ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களையும், ஜூவென்டஸ் அணிக்காக 101 கோல்களையும், போர்ச்சுகல் அணிக்காக 115 கோல்களையும், ஸ்போர்டிங்காக 5 கோல்களையும் இதுவரை அடித்துள்ளார். புதிய சாதனை படைத்த ரொனால்டோவிற்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டையும் கூறி வருகின்றனர்.






ரொனால்டோ சாதனை படைத்த இந்த கோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி 759 கோல்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண