Pro Kabaddi 2023: இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் அதிக மக்களால் விரும்பப் படும் போட்டி என்றால் அது ஹாக்கி. இந்தியாவில் கிரிக்கெட்டுக்குப் பின்னர் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் காராணமாக இந்தியாவில் தற்போது கால்பந்து மற்றும் கபடிக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அவர்களின் ஆதரவும் பெறுகியுள்ளது. மக்களின் ஆதரவை கணக்கில் எடுத்துக் கொண்ட சினிமா பிரபலங்கள் புரோ கபடியில் ஸ்பான்சர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் பிரமாண்டமான லீக் போட்டிகளில் ஒன்றான புரோ கபடி லீக் போட்டி தொடங்கவுள்ளது. இந்த லீக்கில் களமிறங்கும் 12 அணிகளும் இம்முறை அவரவர் சொந்த களங்களில் விளையாடவுள்ளனர். இதனால் ரசிகர்கள் தங்களின் அபிமான அணி விளையாடுவதை நேரில் பார்க்க முடியும். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த லீக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தன் 132 போட்டிகள் இந்த சீசனில் நடைபெறவுள்ளது.
10வது சீசனில் களமிறங்கும் 12 அணிகள்
- பெங்கால் வாரியர்ஸ்
- பெங்களூரு புல்ஸ்
- தபாங் டெல்லி கே.சி
- குஜராத் ஜெயண்ட்ஸ்
- ஹரியானா ஸ்டீலர்ஸ்
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
- பாட்னா பைரேட்ஸ்
- புனேரி பல்டன்
- தமிழ் தலைவாஸ்
- தெலுங்கு டைட்டன்ஸ்
- யு மும்பா
- உ.பி யோதா
இதுவரை நடந்து முடிந்த 9 சீசன்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்றால் அது பாட்னா பைரேட்ஸ்தான். அதுவும் இந்த அணி தொடர்ந்து மூன்று முறை அதாவது ஹாட்ரிக் கோப்பையை வென்றது.
அதேபோல் புரோ கபடி லீக் தொடங்கப்பட்ட முதல் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வென்றது. அதன் பின்னர் கடந்த 9வது சீசனை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வென்றுள்ளது. பாட்னா பைரேட்ஸ் அணிக்கு அடுத்தபடியாக அதிக கோப்பைகளை வென்ற அணியாக உள்ள அணி என்றால் அது ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிதான். அதன் பின்னர் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி கே.சி ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணி இன்னும் ஒரு முறைகூட இறுதிப் போட்டிக்குச் சென்றதில்லை.
இதுவரை கோப்பையை வென்ற அணிகள் விபரம்
புரோ கபடி லீக் சீசன் 1 |
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 2 |
யு மும்பா |
புரோ கபடி லீக் சீசன் 3 |
பாட்னா பைரேட்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 4 |
பாட்னா பைரேட்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 5 |
பாட்னா பைரேட்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 6 |
பெங்களூரு புல்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 7 |
பெங்கால் வாரியர்ஸ் |
புரோ கபடி லீக் சீசன் 8 |
தபாங் டெல்லி கே.சி |
புரோ கபடி லீக் சீசன் 9 |
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் |