தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கபடி  போட்டி ட்ராவில் முடிவடைந்தது.


இந்திய ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு, தமிழ் தலைவாஸ் அணிக்கும், குஜராத் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.


பரபரப்பில் போட்டி:


கபடி போட்டி ஆரம்பித்தது முதலே,புள்ளிகளில் சென்னை அணி சற்று முன்னிலையிலே சென்றது. முதல் பாதி முடிவடைந்த பின் தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் அணியும் புள்ளியில் நெருங்கியே இருந்தன. 


ஆனால் கடைசி 5 நிமிடத்தில் சென்னை அணி, சற்று புள்ளிகளில்  முன்னிலையுடன் இருந்தது. ஆனால் விடாது குஜராத் அணி துரத்தி வந்தது.


கடைசி 2 நிமிடத்தில், தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளும் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி  27 புள்ளிகளும் எடுத்திருந்தன.


ஆனால், கடைசி ஒரு நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளும், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி  30 புள்ளிகளும் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.






ட்ரா


இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என பரபரப்புடன் சென்று கொண்டிருந்து போட்டியில், இரு அணிகளும் 31 புள்ளிகள் பெற்றன. கடைசி ரைடு செல்லும் வாய்ப்பு தமிழ் தலைவாஸ்க்கு கிடைத்தது. ஆனால் தமிழ் தலைவாஸ் அணி வீரர், தாண்டும் கோடை மட்டும் தொட்டு விட்டு திரும்பினார்.


இதையடுத்து நேரம் முடிவடைந்ததை தொடர்ந்து, போட்டி ட்ராவானது. இதனால் இரு அணிக்கும் 3 புள்ளிகள் வழங்கப்படும். இப்போட்டியில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றிருந்தால், வெற்றி பெற்ற அணிக்கு மொத்தமாக 6 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






இப்போட்டியில் மிகவும் நட்சத்திர வீரராக பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ்-ன் பவன் ஷெராவத்-க்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியின் பாதியிலையே வெளியே சென்றார். இது தமிழ் தலைவாஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.


ப்ரோ கபடி:


12 அணிகள் களமிறங்கும், 9வது சீசனுக்கான ப்ரோ கபடி தொடர், நேற்று தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 


இம்முறை புதிய வீரர்களுடன் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியுள்ளது.  9வது சீசனிற்கு தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, ஒருமுறை கூட கோப்பையை தமிழ் தலைவாஸ் அணி கைப்பற்றவில்லை. இந்த தொடரில் வெல்லும் முனைப்புடன் தமிழ் தலைவாஸ் விளையாடிக் கொண்டு வருகிறது.