Tamil Thalaivas Vs U Mumba LIVE: 50 -34; தமிழ் தலைவாஸ் அணி வெற்றி; புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியும் அசத்தல்
Tamil Thalaivas Vs U Mumba LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை வீழ்த்தியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 50 புள்ளிகளும் யு மும்பா அணி 34 புள்ளிகளும் எடுத்தது.
தமிழ் தலைவாஸ் அணி 50 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது.
யு மும்பா அணி இதுவரை மூன்று முறை ஆல் அவுட் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி 40 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
போட்டியின் கடைசி 6 நிமிடங்களில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளுகள் எடுத்து விளையாடி வருகின்றது. யு மும்பா அணி 28 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது.
இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்த நிலையில் அதாவது முதல் 30 நிமிடங்கள் முடிந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 36 புள்ளிகளும் யு மும்பா அணி 27 புள்ளிகளும் எடுத்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி 36 புள்ளிகளும் யு மும்பா அணி 25 புள்ளிகளும் எடுத்து விளையாடி வருகின்றது. யு மும்பா அணி தமிழ் தலைவாஸ் அணியை துரத்தி வருகின்றது.
தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிட ஆட்டத்தில் 35 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
தமிழ் தலைவாஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி புள்ளிகளை எடுத்து வருகின்றது.
தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனது.
தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர் நரேந்தர் 10 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 27 புள்ளிகளும், யு மும்பா அணி 17 புள்ளிகளும் எடுத்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணிக்கு எதிராக 27 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
யு மும்பா அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சி செய்து வருகின்றது.
தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகள் எடுத்து 10 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. யு மும்பா அணி 10 புள்ளிகள் எடுத்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி 18 புள்ளிகளும் யு மும்பா அணி 10 புள்ளிகளும் எடுத்து சிறப்பாக முன்னிலை வகித்து வருகின்றது.
முதல் 10 நிமிடங்கள் முடிந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் யு மும்பா அணி 10 புள்ளிகளும் எடுத்துள்ளது.
யு மும்பா அணி ஆல் அவுட் ஆகி வெளியேறியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 13 புள்ளிகள் எடுத்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி முதலில் 10 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு புள்ளிகளை எடுத்து வருகின்றார்.
தமிழ் தலைவாஸ் அணியின் ஹிமன்ஷூ போனஸ் மற்றும் மூன்று புள்ளிகள் என மொத்தம் 4 புள்ளிகள் எடுத்துள்ளார்.
யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிக் கணக்கை தொடங்கியது.
தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது.
யு மும்பா: குமன் சிங், சுரீந்தர் சிங், அமீர்முகமது ஜபர்தனேஷ், விஸ்வந்த் வி, முகிலன் சண்முகம், பிட்டு, சோம்பிர்
தமிழ் தலைவாஸ்: சாகர், நரேந்தர், சாஹில் குலியா, அஜிங்க்யா பவார், மோஹித், எம். அபிஷேக். ஹிமான்ஷு
இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்துள்ளனர்.
தமிழ் தலைவாஸ் அணி இன்று யு மும்பா அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
Background
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 94வது போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை சந்திக்கிறது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி (ஜனவரி 28) இன்று யு மும்பா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் கடந்த போட்டியில் எப்படி..?
கடந்த ஜனவரி 24ம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் மோத தயாராக உள்ளது. கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 54-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10 இல் தமிழ் தலைவாஸ் அணியின் ஆறாவது வெற்றியாகும்.
இதற்கிடையில், யு மும்பா கடந்த ஜனவரி 26ம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 35-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் இதுவரை நேருக்குநேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 முறை யு மும்பா அணியை எதிர்கொண்டுள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக 7 வெற்றிகளுடன் யு மும்பா அணி முன்னிலையில் உள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்த நிலையில், தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையேயான சீசன் 10ல் நடந்த போட்டியில் யு மும்பா அணி, தமிழ் தலைவாஸ் அணியை 46-33 என்ற கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
15 போட்டிகளுக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் 10வது இடத்தில் உள்ளது. இதுவரை 6 முறை வெற்றியும் 9 தோல்வியும் அடைந்து 35 புள்ளிகளை குவித்துள்ளது. மறுபுறம், யு மும்பா 6 போட்டிகளில் வெற்றி, 7 தோல்வி, 2 டையில் விளையாடி ஏழாவது இடத்தில் உள்ளது. அவர்கள் மொத்தம் 40 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
தமிழ் தலைவாஸ் vs யு மும்பா அணியில் சிறந்த வீரர்கள் யார் யார்..?
தமிழ் தலைவாஸ்:
14 போட்டிகளில் 110 ரெய்டு புள்ளிகளுடன், நரேந்தர் தமிழ் தலைவாஸ் ரெய்டிங் பிரிவில் கலக்கி வருகிறார். இவர் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் 10 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார்.
இதற்கிடையில், தமிழ் தலைவாஸின் டிபென்ஸ் பிரிவில் கேப்டன் சாகர் ரதி 14 போட்டிகளில் 58 டிபென்ஸ் புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார். இதுவரை 25 புள்ளிகள் குவித்துள்ள ஹிமான்ஷு அணியில் முதல் ஆல்ரவுண்டர் ஆவார்.
யு மும்பா:
யு மும்பா அணியை பொறுத்தவரை, குமன் சிங் அந்த அணியில் முக்கிய ரைடராக இருப்பார். குமன் சிங் 15 போட்டிகளில் 139 ரெய்டு புள்ளிகளை அடித்துள்ளார். இதில் 13 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகளும் அடங்கும்.
சுரிந்தர் சிங் 15 போட்டிகளில் 28 டிபென்ஸ் புள்ளிகளைப் பெற்ற அணியிலிருந்து சிறந்த டிபென்டராகவும், அமீர்முகமது ஜஃபர்தனேஷ் 14 ஆட்டங்களில் 108 புள்ளிகளுடன் யு மும்பா அணியில் முதல் ஆல்ரவுண்டராகவும் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -