ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் 50வது லீக் போட்டியில் இன்று (டிசம்பர் 31ம் தேதி) நொய்டா உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசன் தொடங்கியது முதலே தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. 


மறுபுறம், பெங்களூரு புல்ஸின் நிலைமையும் அதேபோல்தான் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இதையடுத்து, இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என களமிறங்கும். 


தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் அணி:


தமிழ் தலைவாஸ்


ரைடர்ஸ்- பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு


டிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்


ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு


பெங்களூரு புல்ஸ்


ரைடர்ஸ்- விகாஷ் கண்டோலா, மோனு, பியோட்டர் பமுலக், அபிஷேக் சிங், பாந்தி, நீரஜ் நர்வால், சுஷில், பாரத், அக்ஷித்


டிஃபெண்டர்கள்- சுர்ஜித், விஷால், ரக்ஷித், போனபார்த்திபன் சுப்ரமணியன், சவுரப் நந்தால், அமன், சுந்தர், யாஷ் ஹூடா, எம்.டி.லிட்டன், ஆதித்யா பவார், பிரதீக், அங்கித், அருள்நந்தபாபு, ரோஹித் குமார்.


ஆல்-ரவுண்டர்கள்- ரன் சிங், சச்சின் நர்வால்.


நேருக்கு நேர்:


ப்ரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 12 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்த 12 ஆட்டங்களில், பெங்களூரு காளை 10ல் வெற்றி பெற்றுள்ளது, தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


தமிழ் தலைவாஸ்


1. சாகர் (கேப்டன்), 2. சாஹில், 3. மோஹித், 4. எம். அபிஷேக், 5. ஹிமான்ஷு, 6. அஜிங்க்யா பவார், 7. நரேந்தர் ஹோஷியார்.


பெங்களூரு புல்ஸ்


1. சுர்ஜீத் சிங், 2. அமன், 3. விஷால், 4. சவுரப் நந்தல் (கேப்டன்), 5. நீரஜ் நர்வால், 6. பாரத், 7. சுஷில் ஓம்.


எப்போது, ​​எங்கு பார்க்கலாம்..? 


தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் போட்டியின் லைவ்-ஆக்சன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


நேரம் - இரவு 9:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 


ஸ்ட்ரீமிங்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ டிஸ்னி+ ஹாட்ஸ்டார்


தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் முழு அணிவிவரம்:


தமிழ் தலைவாஸ் (tamil thalaivas) : அஜிங்க்யா பவார், சாகர், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமதுரேசா கபௌத்ரஹங்கி, ரித்திக், மசன்முது


பெங்களூரு புல்ஸ் (bengaluru bulls) : நீரஜ் நர்வால், பாரத், சௌரப் நந்தால், சுர்ஜித் சிங், அபிஷேக் சிங், பாந்தி, மோனு, அங்கித், சுஷில், ரக்ஷித், ரோஹித் குமார், யாஷ் ஹூடா, விஷால், விகாஷ் கண்டோலா, ரன் சிங், எம்டி. லிட்டன் அலி, பியோட்டர் பாமுலாக், பொன்பார்த்திபன் சுப்பிரமணியன், சுந்தர்