நாள்: 31.12.2023 - ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


இணையம் சார்ந்த துறைகளில் திறமைக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். நெருக்கடியான சில சூழல்கள் மறையும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். கலை பொருட்கள் மீதான ஆர்வம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பயணனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் புதிய அனுபவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் மாற்றம் உண்டாகும். உயர் கல்வி நிமிர்த்தமான குழப்பங்கள் குறையும். குடும்பத்தில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.


மிதுனம்


உத்தியோக செயல்பாடுகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர் பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பத்திர துறைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள். 


கடகம்


பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சமூகம் பற்றிய புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சிறு தூரப் பயணத்தால் அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கால தாமதமாகி கிடைக்கும். எழுத்து துறைகளில் அனுபவம் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.  


சிம்மம்


பாடங்களில் இருந்துவந்த மறதி தன்மைகள் குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வரவுகளில் சில ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வரவுகளில் ரகசியம் வேண்டும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.


கன்னி


இனம்புரியாத சில சிந்தனைகளால் பதட்டம் ஏற்பட்டு நீங்கும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சில திடீர் செலவுகளின் மூலம் நெருக்கடிகள் தோன்றும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும். பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.


துலாம்


கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். துணைவரின் எண்ணிங்களை புரிந்து கொள்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குழந்தைகளின் படிப்புகளில் இருந்த மந்தத்தன்மை குறையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணி மாற்ற வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். திடீர் வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக புதிய முயற்சிகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.


தனுசு


தகவல் தொடர்பு துறைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய அனுபவங்களின் மூலம் முயற்சிகளில் மாற்றம் உண்டாகும். கணிதம் தொடர்பான துறைகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.


மகரம்


பயனற்ற செலவுகளை குறைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் பொறுமை வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.


கும்பம்


மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.


மீனம்


சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பழைய நினைவுகளால்  சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வியாபாரப் பணிகளில் அறிமுகமும், ஆதாயமும் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.