ப்ரோ கபடி லீக் போட்டியின் நொய்டாவில் நடைபெற்ற இறுதிநாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், சொந்த மண்ணில் உபி யோதாஸ் அணி, டேபிள் டாப்பரான புனேரி பல்டான்ஸ் அணியுடன் மோதியது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, மன்பிரீத் சிங் தலைமையிலான ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்டான்ஸ் அணி, உபி யோதாஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45-34 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்தநிலையில், நேற்றைய உபி யோதாஸ் - புனேரி பல்டன் போட்டிக்கு பிறகு அதிக ரெய்டு மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். 

ரெய்டு புள்ளிகள்: 

வரிசைவீரர்கள் அணிகள்போட்டிகள்புள்ளிகள்
1அர்ஜூன் தேஸ்வால்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

990
2மனிந்தர் சிங்பெங்கால் வாரியர்ஸ்989
3ப்ரதீப் நர்வால் UP யோதாஸ் 1087
4சுரேந்தர் கில்UP யோதாஸ்786
5பரத்பெங்களூரு புல்ஸ்879

அர்ஜுன் தேஷ்வால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக 14 ரெய்டு புள்ளிகளைப் பெற்றதன் மூலம் ரைடர்ஸ் லீடர்போர்டில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து அர்ஜுன் முதல் இடத்திற்கு முன்னேறியதால் மனிந்தர் சிங் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.  பர்தீப் நர்வால் புனேரி பல்டானுக்கு எதிராக 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ப்ரோ கபடி 2023 இல் சிறந்த டிஃபெண்டர்கள்

வரிசைவீரர்கள்அணிபோட்டிகள்புள்ளிகள்
1சுமித் UP யோதாஸ் 930
2முகமதுரேசா ஷட்லூயிபுனேரி பல்டன்929
3

சாஹில் குலியா

தமிழ் தலைவாஸ்1026
4நிதீஸ் குமார்UP யோதாஸ் 1026
5ஷுபம் ஷிண்டேபெங்கால் வாரியர்ஸ்9

25

டிபெண்ட்ஸ் லீடர்போர்டின் முதல் 5 இடங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. புனேரி பல்டானுக்கு எதிராக ஆறு டிபெண்ட்ஸ் புள்ளிகளைப் பெற்ற சுமித் மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். புனே அணியின் முகமதுரேசா ஷட்லூயி  34 டிபெண்ட்ஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தமிழ் தலைவாஸ் அணியின் சாஹில் குலியா, டிஃபண்டர்ஸ் லீடர்போர்டில் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

புள்ளிகள் அட்டவணை: 

தரவரிசைஅணிகள்போட்டிவெற்றிதோல்விடிராபுள்ளிகள்
1புனேரி பல்டன்981041
2குஜராத் ஜெயண்ட்ஸ்1064034
3ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்952233
4 தபாங் டெல்லி கே.சி954130
5பாட்னா பைரேட்ஸ்752027
6யு மும்பா 853026
7 ஹரியானா ஸ்டீலர்ஸ்954025
8பெங்களூரு புல்ஸ்1046025
9பெங்கால் வாரியர்ஸ்934222
10UP யோதாஸ்1137121
11தமிழ் தலைவாஸ்927013
12தெலுங்கு டைட்டன்ஸ்91808