விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்த கருத்துக்கு நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோயினாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை குறிப்பிட்டு ஆயிரம் கோவில்கள்.அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்து அமைப்பை சேர்ந்த பலரும் சூரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் வீடியோ ஒன்றில் கல்வி அறக்கட்டளையையும் கோவிலையும் இணைத்து சூரி பேசுகிறாரே...அவர் ஏன் சர்ச், மசூதிகள் கட்டுவதை குறிப்பிட்டு பேசவில்லை. இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? ..என்னயா அநியாயமா இருக்குது.
அடப்பாவி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது தெரியாதா?...ஆமா இப்ப சூரி ஹோட்டல் வச்சி நடத்துறாரு...முன்னாடி சாலிகிராமத்துல இருக்கும்போது ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டவர் தானே...நீங்களும் ஒரு இந்துதானே..ஏன் கோவில் கட்டுவதை தப்பாக பேசுகிறீர்கள்..இதெல்லாம் தேவை இல்ல சூரி...வேண்டாம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்