கிரிக்கெட்டை அடுத்து, உள்ளூர் லீக் தொடர் ஒன்றுக்கு பெரும் வரவேற்பு இருப்பது ப்ரோ கபடி லீக் விளையாட்டுக்குதான். அந்த வரிசையில், கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த ப்ரோ கபடி லீக் கைவிடப்பட்டு 2021-ம் ஆண்டுக்கான சீசன் நடந்து முடிந்துள்ளது.


12 அணிகள் பங்கேற்றிருக்கும் ப்ரோ கபடி லீக் தொரில் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை. பூட்டிய மைதானத்திற்குள் நடந்து வரும் ப்ரோ கபடி தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தொடங்கியது. அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில், பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி தபாங் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 36-37 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி தபாங் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. மூன்று முறை ப்ரோ கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கும் பாட்னா பைரேட்ஸ் அணி கோப்பையை நழுவவிட்டுள்ளது.










டெல்லி அணியின் நவீன் குமார், விஜய் ஆகியோரின் அதிரடி ரைடால், டெல்லி தபாங் அணி இறுதியில் வெற்றி பெற்று ப்ரோ கபடி சீசன் 8-ம் சாம்பியனானது. ப்ரோ கபடி சீசனில் டெல்லி அணி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில், பெங்கால் வாரியஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி தபாங் அணி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண