ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டு அணிக்கும், சட்டீஸ்கர் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழ்நாடு அணியில் இரட்டையர்களான பாபா அபராஜித்தும், பாபா இந்திரஜித்தும் இடம்பிடித்திருந்தனர்.


முதல்நாளிலே இரட்டையர்கள் இருவரும் தமிழ்நாடு அணிக்காக ஜோடி சேர்ந்தனர். ஜோடி சேர்ந்தது முதலே நிதானமாகவும், அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் சதம் அடித்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இரட்டையர்கள் இருவர் ஒன்றாக இணைந்து ஒரே போட்டியில் சதமடித்திருப்பது இதுவே முதன்முறை ஆகும். இந்த புதிய சாதனையை பாபா அபராஜித்தும் – பாபா இந்திரஜித்தும் படைத்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.




சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் 141 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 197 பந்துகளில் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழ்நாடு அணி நேற்று முதல்நாள் ஆட்டநேர முடிவில் 308 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்தது.


மேலும் படிக்க : Virat Kohli: கோல்டன் பூட்: கேன்சரில் இருந்து நீங்கள் மீண்டு வந்ததால் இது நடந்தது.. யுவராஜ் சிங் பவரை காட்டிய கோலி


இரட்டையர்களான இவர்கள் இருவரும் இதற்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சதமடித்துள்ளனர். ஆனால், அப்போது இருவரும் வேறு வேறு அணிகளுக்காக ஆடினர். அப்போது, பாபா இந்திரஜித் இந்திய ரெட் அணிக்காக ஆடும்போது சதமடித்தார். பாபா இந்திரஜித் இந்தியா கிரீன் அணிக்காக ஆடும்போது சதமடித்தார். துலீப் டிராபிக்காக நடைபெற்ற அப்போதைய கிரிக்கெட் தொடரில் இவர்கள் இருவரும் சதமடித்திருந்தனர்.




இதுதொடர்பாக, பாபா இந்திரஜித் கூறும்போது, கடந்த முறை நாங்கள் இருவரும் சதமடித்தபோது இருவரும் எதிரெதிர் அணியில் இருந்தோம். தற்போது தமிழ்நாடு அணிக்காக ஆடி இணைந்து சதமடித்திருப்பது மிகநு்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.  பாபா அபராஜித்தும், பாபா இந்திரஜித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஐ.பி.எல். தொடரிலும் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய சாதனை படைத்த இவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். விஜய்சங்கர் உள்ளிட்ட முக்கியமான சில தமிழக வீரர்கள் இவர்களது நண்பர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : IND vs SL, 1st T20 Live : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண