உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது.  இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் பாகிஸ்தான் அணி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. க்ரூப்:2-ல் இடம்பிடித்திருக்கும் அணிகளுக்கான போட்டிகள் நாளை தொடங்குகின்றது. முதல் போட்டியிலேயே இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியை ஒருபோதும் வீழ்த்தியதே இல்லை என்பதால் இந்த போட்டி அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணியுடன் மோதும் பாகிஸ்தான் அணி விவரம்:






Also Read: 23 நாட்கள்... 1 கோப்பை... டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ!


ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து, இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. ஏற்கனவே 12 அணிகள் தேர்வாகி இருந்த நிலையில், தகுதிச்சுற்று முடிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், இலங்கை, நமிபியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா vs தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. 


சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ள ஒவ்வொரு அணியும், அந்த அணி இடம் பெற்றிருக்கும் பிரிவில் உள்ள மற்ற 5 அணிகளோடு விளையாடும். இதனால், ஒவ்வொரு அணிக்கு 5 போட்டிகள் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற உள்ளது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டில்,  5 வருடங்களில் இரு பரம எதிரிகளுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் 2016 டி20 உலகக்கோப்பையில் மோதினர். 2016 மார்ச் 19ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது இரண்டு பயிற்சி ஆட்டங்களையும் வென்றுள்ளது.  இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியா, அடுத்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்தப்போட்டியில், தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை இந்தியா வென்றது. ​​பாகிஸ்தான் 2009 உலகக்போட்டியை வென்றது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண