FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் டி. குகேஷின் சாதனைப் பட்டத்தை வென்றதற்குப் பின்னால் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனநலப் பயிற்சியாளர் பேடி அப்டன்தான்.
பேடி அப்டன்:
2011 உலகக் கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணிக்கும், ஒலிம்பிக்கில் சீனியர் ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் இப்போது குகேஷுடன் FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் என இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களின் வெற்றிப்பயணத்தில் அவர்களுடன் உடன் இருந்தவர் தான் இந்த பேடி அப்டன்.
இதையும் படிங்க: Gukesh Dommaraju: ”அம்மா நான் ஜெயிச்சுட்டேன்!” உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. தனது தாயுடன் கண்கலங்கிய தருணம்!
25 வயதில் தனது விளையாட்டு வாழ்க்கையில் தனது திறனை நிரூபிக்க நேரம் இருந்த போதும், மனநல நிலைப்படுத்தலின் முக்கியத்துவத்திற்கு, குறிப்பாக பெரிய விளையாட்டு வீரர்களுக்கு வரும்போது, அப்டன் அதற்காக உழைத்து தனது பெயரை லைம் லைட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
அப்டன் குறித்து குகேஷ்:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன் நெல் (அப்டன்) எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். அவர் எனது சதுரங்க அணியில் இடம் பெறவில்லை என்றாலும், எனது அணியிலும், இந்தப் போட்டியை நோக்கிய எனது பயணத்திலும் அவர் மிக முக்கியமான நபர்,” என்று செய்தியாளர் சந்திப்பின் போது குகேஷ் கூறினார்.
இப்படி தான் குகேஷ் தயரானார்:
குகேஷுக்கு வெற்றிபெறுவதற்கான நிபந்தனைகளை வழங்குவது மற்றும் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் குறிப்பிட்ட அணுகுமுறையைக் வைத்து எப்படி குகேஷ் வெற்றிப்பெற்றார் என்பதை அப்டன் விளக்கினார்.
"நீங்கள் ஒரு தேர்வில் சிறப்பாகச் செயல்பட விரும்பினால், நீங்கள் முழு புத்தகத்தையும் நன்றாகப் படித்தால் தான் நீங்கள் நம்பிக்கையுடன் அந்தத் தேர்விற்குச் செல்லலாம். புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டால் வெறுமனே நம்பிக்கையுடன் உள்ளே செல்ல வேண்டும் நிலை நமக்கு தேவை இருக்காது," என்று அப்டன் மேற்கோள் காட்டினார்.
முழு புத்தகத்தையும் படித்தார்:
“உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முழு புத்தகத்தையும் படிப்பதன் அடிப்படையில், குகேஷ் முழு புத்தகத்தையும் படித்து முடித்தார். ஒவ்வொரு சிறிய விவரத்திலும்,தனது தூக்கத்தையும் எவ்வாறு நிர்வகிக்கிறார், அவர் தனது வேலையில்லா மீதி நேரத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார், ஒரு விளையாட்டிற்குள் அவர் தன்னை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பது வரை. இப்படி எல்லாவற்றையும் நிர்வாகிக்கும் ஒரு நல்ல திறனை வெளிப்படுத்தும் விளையாட்டி வீரர் அவர்".
இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் மனநிலையை மேம்படுத்துவதில் அப்டனின் பங்களிப்பு, இந்தியாவின் அனைத்து விளையாட்டு துறைகளிலும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும், மேலு தென்னாப்பிரிக்கரான அவர் தனது முழு அறிவு செல்வத்தை இந்திய விளையாட்டு வீரர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு பல வெற்றிகளை நமது வீரர்கள் வருங்காலத்தில் பெறுவார்கள் என்று நம்பலாம்