முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல், "சமீப காலங்களில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு, தற்போதைய வீரர்கள் நன்றாகப் பழகுவதை பிரதிபலிக்கிறது" என்று கருதுகிறார். படேலின் கூறுகையில், "அணியில் மாநில வாரியாக எந்தப் பிரிவும் இல்லை, அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒன்றாக வேலை செய்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக உலக கிரிக்கெட்டில் மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்ததில் நன்றாக தெரிந்தது."
பிளேயர்ஸ் லாஞ்ச் பாட்காஸ்டில் பேசிய பார்த்திவ் படேல், இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம்தான் தற்போது மிகவும் மகிழ்ச்சியான இடம் என்று கூறினார். இப்போது இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமைப் பார்த்தால், இஷாந்த் சர்மா விராட் கோலியுடன் சுற்றித் திரிவதைக் காணலாம். அதேநேரம், நீங்கள் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரைப் ஒன்றாக பார்க்கலாம், இரண்டு வேறுபட்ட வீரர்களும் ஒன்றாக கலந்துரையாடி போட்டியில் இணைவதை காணலாம். ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியாவுடன் வெளியே செல்கிறார், ஒருவர் இந்தியாவின் மேற்கிலிருந்து, மற்றவர் வடக்கிலிருந்து. கிழக்கிலிருந்தும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக்,க்ருனால் பாண்டியாவைப் பார்த்தால், அவர்கள் மூவரும் சிறந்த நண்பர்கள். ஒருவருக்கு ஆங்கிலம் பேச முடியாது, ஒருவருக்கு ஹிந்தி பேச தெரியாது, ஆனால் இன்னும் அவர்கள் நன்றாகத்தான் பழகுகிறார்கள். இந்த காலகட்டத்தில் இந்திய அணி ஏன் சிறப்பாக செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன் என்றால், அவர்கள் நன்றாக ஒன்றி இருக்கிறார்கள், ஐபிஎல் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதெர்டன், டெலிகிராஃப்பில் தனது கட்டுரையில் எழுதினார், இந்தியாவின் லார்ட்ஸ் வெற்றியை காண்கையில், மழையில்லாதிருந்தால் நாட்டிங்காமிலும் வென்றிருப்பார்கள். அவர்களின் ஆட்டத்தின் வெறி, வெற்றிகான தேடல் மற்றும் கடினமான தருணங்களில் அவர்களைச் சுமந்து செல்லும் திறமை, நாட்டிங்ஹாம் டெஸ்ட் எப்படி முடிவடையும் என்ற சந்தேகத்தை நீக்கியிருக்கிறது. இந்த நேரம், இந்தியா 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்திருக்கும்.
இந்திய அணி தொடரை 4-0 அல்லது 3-1 என வெல்லும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். சோனி ஸ்போர்ட்ஸில் அவர் கூறினார்:
"இங்கிலாந்து இரண்டு பேர் கொண்ட அணியாகும். அது ஜோ ரூட் மற்றும் ஜிம்மி ஆண்டர்சன்தான். அங்கு விளையாடும் அனைவரையும் நான் மதிக்கிறேன், ஆனால் இது சரியான டெஸ்ட் அணி போல் தெரியவில்லை, அதனால் தான் மீதமுள்ள மூன்று போட்டிகளையும் இந்தியா வெல்லும் என்று நினைக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் நான் இந்தியா 4-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன், மழை ஒரு ஆட்டத்தின் முடிவை மாற்றினாலும் ஏற்கனவே சொன்ன முடிவு சாத்தியம் என்று நான் இன்னும் நம்புகிறேன்.
ஆகஸ்ட் 25 -ம் தேதி லீட்ஸில் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுகிறது.