காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


‘வீடியோ கான்ஃபரன்ஸ்’ மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 


சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நரேந்திர மோடி படுதோல்வி அடைந்துள்ளது.  விவசாயச் சட்டங்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியலமைப்பு பிரதிநிதிகள், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்கள் ஒட்டுக் கேட்பு சம்பவங்கள், பணவீக்கம், கூட்டாட்சி அரசியல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்பட்டது. 


எதிர்க்கட்சிகள் அளித்த முழு ஒப்புதல் காரணமாகத் தான், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நிறைவேறியது. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றும், தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.