2020-ம் ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் தொடர் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு நடைபெற்றது. அதை அடுத்து, குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனா நாடு பீய்ஜிங் நகரில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. குளிர்கால ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன்பு, ஒலிம்பிக் சுடர் ஏற்றிச் செல்வது வழக்கம். இரண்டாம் நாளான இன்று, பிரபல நடிகர் ஜாக்கி சான், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளோடு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார். 


கொரோனா தொற்று பரவல் பயம் காரணமாக, இம்முறை குளிர்கால ஒலிம்பிக் சுடர் ஏந்திச் செல்லும் நிகழ்ச்சி 3 நாட்களுக்கு சுருக்கி கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமான நகரங்கள் வழியாகவும், மலைகள் வழியாகவும், சீன பெருஞ்சுவர் வழியாகும் ஒலிம்பிக் சுடர் பயணிக்க உள்ளது. கடைசியாக, அந்த ஒலிம்பிக் சுடர் போட்டிகள் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் கிராமத்தை அடையும்.






இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று ஒலிம்பிக் சுடர் சீன பெருஞ்சுவரை வந்தடைந்தது. பிரபல நடிகர் ஜாக்கி சான் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வது இது நான்காவது முறை. இது குறித்து பேசிய அவர், “ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக காலை 4 மணிக்கு எழுந்தேன். நான்காவது முறையாக ஒலிம்பிக் சுடர் ஏந்திச் செல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது, மிகவும் குளிராகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். ஜாக்கியை சந்தித்த குழந்தைகள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


-11 டிகிரி செல்சியஸ் குளிரில், ஒலிம்பிக் சுடர் ஏந்திச் செல்லப்பட்டது. குளிரையும் பொருட்படுத்தாது பொது மக்கள், ஒலிம்பிக் சுடரை காண வந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண