டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் இம்முறை முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று முதல் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கின. தற்போது அனைத்து பிரிவுகளிலும் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியா சார்பில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரமோத் பகத் பங்கேற்றுள்ளார். இவர் நேற்று தன்னுடைய முதல் குரூ போட்டியில் சக இந்திய வீரர் மனோஜ் சர்காரை தோற்கடித்தார். 


அதன்பின்னர் இன்று நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சாண்டரை எதிர்த்து விளையாடினார். அதில் 13 நிமிடங்களில் முதல் கேமை 21-12 என்று வென்றார். இரண்டாவது கேமை 14 நிமிடங்களில் 21-9 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் பிரிவில் தன்னுடைய இரண்டு  போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். இந்த பிரிவில் 5 முறை உலக சாம்பியன் என்பதால் இப்பிரிவில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. 


 






அதேபோல ஆடவர் எஸ்ஹெச்6 பிரிவில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றுள்ளார். இவர் முதல் குரூப் போட்டியில் மலேசிய வீரர் டிடினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை 22-20 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமை 21-10 என எளிதாக வென்றார். இந்தப் போட்டியை 2-0 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மலேசிய வீரர் டிடின் இன்று தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடினார். அதில் காயம் காரணமாக பாதியில் விலகினார். ஆகவே மொத்தம் 3 பேர் கொண்ட குரூப்பில் மலேசிய வீரர் விலகியுள்ளதால் கிருஷ்ணா நாகர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 


 






மகளிர் எஸ்யூ-5 பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி தன்னுடைய இரண்டாவது குரூப் போட்டியில் இன்று பங்கேற்றார். அதில் அவர் துருக்கி வீராங்கனை எமினை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 21-12,21-18 என்ற கணக்கில் பாலக் கோலி வென்றார். ஏற்கெனவே நேற்று தன்னுடைய முதல் குரூப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் பாலக் கோலி தோல்வி அடைந்தார். எனவே நாளை ஜப்பான் வீராங்கனை எமினை தோற்கடிக்கும் பட்சத்தில் பாலக் கோலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவார். 


 






இவை தவிர ஆடவர் எஸ்.எல்-4 பிரிவு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் மற்றும் தருண் தில்லான் ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். இன்று இவர்கள் இருவரும் தங்களுடைய முதல் குரூப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.ஐஏஎஸ் அதிகாரியான  சுஹேஷ் யேத்தி ராஜ் ஜெர்மனி வீரர் நிகல்ஸை 21-9,21-3 என எளிதாக வென்றார். அதேபோல் தருண் தாய்லாந்து வீரர் சிரிபோங்கை 21-7,21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். நாளை இவர்கள் இருவரும் தங்களுடைய இரண்டாவது குரூப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:பாராலிம்பிக் படகுப்போட்டி : அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்திய வீராங்கனை..