டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவர் ரிகர்வ் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இருவரும் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங் வெற்றி பெற்றார். விவேக் சிகாரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால் ஹர்விந்தர் சிங் மட்டும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங் ஜெர்மனி வீரர் மெயிக் சாசெர்விஸ்கியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் 25-21 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 28-23 என்ற கணக்கில் ஹர்விந்தர் சிங் வென்று 4-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டை வென்றால் போட்டியை வென்றுவிடலாம் என்ற வாய்ப்பு ஹர்விந்தர் சிங்கிற்கு கிடைத்தது. மூன்றாவது செட்டில் சுதாரித்து கொண்டு விளையாடிய ஜெர்மனி வீரர் 28-25 என்ற கணக்கில் வென்று 2-4 என ஹர்விந்தரின் முன்னிலையை குறைத்தார்.
நான்காவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் 26-23 என்ற கணக்கில் செட்டை வென்றார். அத்துடன் 6-2 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அவர் தோல்வி அடைந்தாலும் வெண்கலப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். ஆகவே அவர் கிட்டதட்ட பதக்கத்தை நெருங்கியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் இன்று 5 மணிக்கு ஹர்விந்தர் சிங் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக காலிறுதிக்கு முந்தைய போட்டியில் விவேக் சிகாரா விவேக் சிகாரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரிட்டன் அணியின் பிலிப்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் செட்டை 27-25 என்ற கணக்கில் பிரிட்டன் வீரர் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் தலா 25 புள்ளிகள் பெற்றனர். இதனால் 3-1 என்ற கணக்கில் பிலிப்ஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் சிறப்பாக செயல்பட்டு 28-22 என்ற கணக்கில் விவேக் வென்றார். அத்துடன் 3-3 என சமன் செய்தார்.
நான்காவது செட்டில் விவேக் சற்று தடுமாறினார். அதனால் அந்த செட்டை பிலிப்ஸ் 29-22 என்ற கணக்கில் வென்று 5-3 என மீண்டும் முன்னிலை பெற்றார். கடைசி செட்டை வென்றே ஆக வேண்டும் என்று இருந்த விவேக் முதல் அம்பை தவறவிட்டார். இதனால் அந்த செட்டையும் 23-17 என்ற கணக்கில் பிலிப்ஸ் வென்றார். அத்துடன் போட்டியை வென்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து விவேக் வெளியேறினார்.
மேலும் படிக்க: ‛யப்பா... நீங்க வேம்புலியா... கபிலனா...’ தொடரும் பங்களா பாய்ஸ் வெற்றி... கதறிய நியூசி!