டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தடகள பிரிவில் இந்திய அணி சார்பில் 24 பேர் களமிறங்கியுள்ளனர். இதனால் அந்தப் பிரிவில் இந்திய அணி அதிக பதக்கங்களை வெல்லும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் டேக் சந்த் மற்றும் ரஞ்சித் பாட்டி ஆகிய இருவரும் தங்களுடைய பிரிவு தடகள போட்டியில் பதக்கம் வெல்ல தவறினார்கள். இந்தச் சூழலில் இன்று ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் மற்றும் ராம்பால் சாஹர் பங்கேற்றனர். 


இதில் தன்னுடைய முதலில்  நிஷாத் குமார் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டினார். அதன்பின்பு 1.94 மீட்டர் உயரத்தையும் தாண்டினார். 1.98 மீட்டர் உயரத்தை தன்னுடைய இரண்டாவது முயற்சியில் தாண்டி அசத்தினார். அதன்பின்பு 2.02 மீட்டர் உயரத்தையும் அசத்தலாக தாண்டினார். இதைத் தொடர்ந்து 2.06 மீட்டர் உயரத்தை தாண்டி தன்னுடைய ஆசிய சாதனையை சமன் செய்தார். அதன்பின்னர் 2.09 மீட்டர் உயரத்தை அவரால் மூன்று முறையும் தாண்ட முடியவில்லை. இதனால் அதிகபட்சமாக 2.06 மீட்டர் உயரம் தாண்டு நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அமெரிக்கா வீரர் டாலஸூம் 2.06 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்ததால் அவருக்கும் வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டது. இதனால் வெண்கலப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை. 


 






மற்றொரு இந்திய வீரரான ராம்பால் சாஹர் தன்னுடைய முதல் முயற்சியில் 1.84 மீட்டர் உயரத்தை தாண்டினார். அதன்பின்னர் 1.89 மீட்டர் உயரத்தையும் தாண்டினார். இதைத் தொடர்ந்து 1.94 உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாண்டினார். அதன்பின்பு 1.98 மீட்டர் உயரத்தை அவரால் மூன்று முயற்சியிலும் தாண்ட முடியவில்லை. இதனால் அதிக பட்சமாக 1.94 மீட்டர் உயரத்தை தாண்டி 5ஆவது இடத்தை பிடித்தார். 


முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவருக்கான எஃப்-57 பிரிவு ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் ரஞ்சித் பாட்டி பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் முன்று முயற்சியிலும் ரஞ்சித் பாட்டி ஃபவுல் செய்தார். அதன்பின்னர் அடுத்த மூன்ற முயற்சியிலும் அவர் தொடர்ந்து ஃபவுல் செய்தார். இதனால் இறுதிப் போட்டியில் எந்தவித தூரமும் வீசாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.  


அதேபோல் ஆடவருக்கான எஃப்-55 பிரிவு குண்டு எறிதலில் பங்கேற்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியை கொடியை ஏந்திச் சென்றவர் டேக் சந்த் பங்கேற்றார். இந்தப் போட்டியில்  தன்னுடைய  நான்காவது முயற்சியில் 9.04 மீட்டர் தூரம் வீசினார். இந்த ஆண்டில் அவர் வீசிய அதிகபட்ச தூரம் இதுவாகும். 9.04 மீட்டர் தூரம் மட்டும் வீசி இந்தப் பிரிவில் அவர் 8ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.