டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் கோல்ஃப் போட்டிகளின் கடைசி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதிதி அசோக் தொடக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதன்பின்னர் கடைசியில் 18 குழிகளின் முடிவில் நான்காவது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 


இந்நிலையில், இன்றைய போட்டி முடிவில் நான்காவது இடத்தில் நிறைவு செய்த அதிதி, நூலிழையில் பதக்கம் வெல்ல வாய்ப்பை இழந்துள்ளார். இந்தியாவே கோல்ஃப் பார்க்க தொடங்கியுள்ளது, கோல்ஃப் விளையாட்டின் ஆட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அதிதியை உற்சாகப்படுத்தி வந்தது. நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் அதிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.