1920ம் ஆண்டு முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பிற்கு தலைமை தாங்கியவர்களின் பட்டியலை கீழே காணலாம்,
- 1920ம் ஆண்டு இந்தியா பங்கேற்ற முதலாவது ஒலிம்பிக் போட்டியில் தடகள வீரர் பர்மா பானர்ஜி கொடியேந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 1932ம் ஆண்டு அப்போதைய ஹாக்கி கேப்டன் லால் ஷா போக்கரி இந்திய கொடியை ஏந்தி சென்றார்.
- 1936ம் ஆண்டு ஹாக்கி லெஜண்ட் தயான்சந்த் இந்திய கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
- 1948ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் முதல் கேப்டன் தலிமெரான் ஆவ் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 1952ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், ஹாக்கி விளையாட்டு மேதைகளில் ஒருவரான பல்பீர்சிங் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினார்.
- 1956ம் ஆண்டும் இந்திய தேசிய கொடியை ஏந்தி பல்பீர்சிங்கே இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 1964ம் ஆண்டு தடகள வீரர் குர்பசான்சிங் ரந்தவா தேசிய கொடியை ஏந்தி இந்திய அணி வகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 1972ம் ஆண்டு குத்துச்சண்டை வீரர் டி.என்.டெவின் ஜோன்ஸ் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினார்.
- 1984ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஜாபர் இக்பால் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 1988ம் ஆண்டு மல்யுத்த வீரர் கர்தார் தில்லான் சிங் இந்திய தேசிய கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
- 1996ம் ஆண்டு இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் பர்கத்சிங் தேசிய கொடியை ஏந்தியை இந்திய அணி வகுப்பை வழிநடத்தினார்.
- 2000ம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டயர் பயஸ் தேசிய கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
- 2004ம் ஆண்டு தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தேசிய கொடியை ஏந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
- 2008ம் ஆண்டு துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்திய அணிவகுப்பிற்கு தேசிய கொடியை ஏந்தி தலைமை தாங்கினார்.
- 2012ம் ஆண்டு மல்யுத்த வீரர் சுஷில்குமார் இந்திய அணிவகுப்பிற்கு தேசிய கொடியை ஏந்தி வழிநடத்தினார்.
- 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு தனிநபர் பிரிவின் முதன்முறை தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி இந்திய அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.