கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளனர். ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
அந்த வரிசையில். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடலை இயற்றி வெளியிட்டனர். ஒலிம்பிக் தேர்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் டீசர் கடந்த ஜூலை 9-ம் தேதி வெளியானது. அதை தொடர்ந்து, முழு பாடல் இன்று மதியம் 3.45 மணிக்கு வெளியானது. ஒலிம்பிக் செல்ல இருக்கும் இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ‘Team India Cheer Song’ ஆக இந்த பாடலை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
அதே போல, இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், கேப்டன் விராட் கோலி, சுபம் கில் ஆகியோர் இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.