Mirabai Chanu Medal: மீரா பாய் சானுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு! ஊக்க மருந்து சோதனையில் முதலிடம் பெற்ற சீனா வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு முன்பு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

Continues below advertisement

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில்  115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

Continues below advertisement

சீனாவின் ஹோ சிஹாய் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற ஹோ சிஹாய்க்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஒரு வேளை, அந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தால், மீரா பாய் சானுக்கு தங்கப்பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், மொத்தம் 210 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றா ஹோ சிஹாய். இது பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒலிம்பிக் ரெக்கார்டு ஆகும். இந்நிலையில்தான், அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், அதனால் அவர் டோக்கியோவில் தங்க இருக்க வேண்டும் எனவும் ஒலிம்பிக் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசோதனையில், ஹோ சிஹாய் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்.

கர்ணம் மல்லேஸ்வரி 2000ஆம் ஆண்டு 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 21ஆண்டுகளுக்கு மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு 90 கிலோவிற்கு மேல் தூக்கி இருந்தால் தங்கப்பதக்கம் அவருக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும். எனினும் அவர் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதகக்த்தை உறுதி செய்தார். 

ஒலிம்பிக் விளையாட்டில், இந்தியா சார்பாக வரலாறு படைத்த மீராபாய் சானுவிற்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி இவர் உலக சாதனைப் படைத்திருந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் பதக்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதை தற்போது மீராபாய் சானு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க பட்டியல் கணக்கையும் மீராபாய் சானு துவக்கி வைத்துள்ளார். 

Continues below advertisement