2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் டோக்கியோவை நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.
1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் முதல்முறையாக இந்தியா பங்கேற்றது. இதுவரை, 9 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள், 12 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 28 பதக்கங்களை இந்தியா ஒலிம்பிக் தொடர்களில் கைப்பற்றியுள்ளது. இந்தியா வென்றுள்ள ஒலிம்பிக் பதக்கங்களின் பட்டியல் இதோ!
1900, பாரீஸ், வெள்ளிப்பதக்கம், நார்மன் பிரிச்சார்டு, ஆண்களுக்கான 200 மீ ஓட்டம், தடகளம்
இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன்பே, தனது முதல் பதக்கத்தை ஒலிம்பிக் தொடரில் கைப்பற்றியிருந்தது. ப்ரிட்டன் - இந்தியா வீரரான நார்மன் பிரிச்சார்டு, இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை கைப்பற்றி தந்தார்.
1900, பாரீஸ், வெள்ளிப்பதக்கம், நார்மன் பிரிச்சார்டு, ஆண்களுக்கான 200 மீ தடையோட்டம், தடகளம்
1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில், இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று தந்தார். நார்மன் பிரிச்சார்டு. இதனால், அந்த ஒலிம்பிக் தொடரில் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 7வது இடத்தை பிடித்தது.
1928, ஆம்ஸ்டர்டாம், தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1932, லாஸ் ஏஞ்சல்ஸ், தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1936, பெர்லின், தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1948, லண்டன், தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1952, ஹெல்சின்கி, தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1956, மெல்போர்ன், தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1960, ரோம், வெள்ளிப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1964, டோக்கியோ, தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1968, மெக்சிகோ, வெண்கலப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1972, முனிச், வெண்கலப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
1980, மாஸ்கோ, தங்கப்பதக்கம், ஆண்களுக்கான ஹாக்கி போட்டி
8 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்ல்கலப் பதக்கம் என இந்தியா ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டில் கொடிகட்டி பறந்தது. ஆனால், 1980-ம் ஆண்டோடு இந்தியாவின் ஹாக்கி ஆதிக்கம் புதைந்துபோனது.
1952, ஹெல்சின்கி, வெண்கலப் பதக்கம், கே.டி ஜாதவ், மல்யுத்தம்
ஒலிம்பிக் தனிநபர் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். ஹாக்கி விளையாட்டில் மட்டும் 50 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணிக்கு, இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கணக்கை தொடக்கி வைத்தவர் இவர்தான்.
1996, அட்லாண்டா, வெண்கலப்பதக்கம், லியாண்டர் பயஸ், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, டென்னிஸ்
டென்னிஸ் விளையாட்டு என்றாலே, லியாண்டர் பயஸ் என சொல்லும் அளவிற்கு பிரபலமான விளையாட்டு வீரர். சர்வதேச டென்னிஸ் அரங்கில் சிறப்பாக விளையாடி வந்த பயஸிற்கு, ஒலிம்பிக் கனவும் கைக்கூடியது 1996 ஒலிம்பிக் தொடரில்தான்.
2000, சிட்னி, வெண்கலப்பதக்கம், கர்ணம் மல்லேஸ்வரி, பெண்களுக்கான 69 கிலோ எடை பிரிவு, பளுதூக்குதல்
ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி. பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இந்தியாவின் பதக்க கனவை தூக்கி சென்றவர்.
2004, ஏதென்ஸ், வெள்ளிப்பதக்கம், ராஜவர்தன்சிங் ரத்தோர், துப்பாகிச் சுடுதல்
துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை பற்றி இந்திய மக்களிடம் சென்றடைய காரணம் ராஜவர்தன்சிங் ரத்தோர். ஒலிம்பிக் துப்பாகிச் சுடுதலில் இந்தியா பதக்கங்களை வெல்ல ஆரம்பித்ததற்கான ஆரம்பப்புள்ளி இதுவே.
2008, பீய்ஜிங், தங்கப்பதக்கம், அபினவ் பிந்த்ரா, 10 மீ ஏர் ரைஃபிள், துப்பாக்கிச் சுடுதல்
ஒலிம்பிக் தொடர் தனிநபர் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்த்ராவைச் சேரும். தங்கமகன் அபினவ் பிந்த்ரா என இந்திய ரசிகர்களால் கொண்டாப்படுபவர்.
2008, பீய்ஜிங், வெண்கலப்பதக்கம், சுஷில் குமார், ஆண்களுக்கான 66 கிலோ, மல்யுத்தம்
2008, பீய்ஜிங், வெண்கலப்பதக்கம், விஜேந்தர் சிங், ஆண்களுக்கான பிரிவு, மல்யுத்தம்
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்தியா பதக்கம் வெல்ல 56 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. 1952-ம் ஆண்டை அடுத்து மல்யுத்த விளையாட்டில் சுஷில் குமாரும், விஜேந்தர் சிங் ஆகியோர் பதக்கம் வென்றனர்.
2012, லண்டன், வெள்ளிப்பதக்கம், விஜய் குமார், ஆண்களுக்கான 25 மீ ராபிட் ஃபையர், துப்பாக்கிச் சுடுதல்
2012, லண்டன், வெண்கலப் பதக்கம், ககன் நாரங், ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபில் பிரிவு, துப்பாக்கிச் சுடுதல்
ஒலிம்பிக்கை தனிநபர் விளையாட்டுகளை பொருத்தவரை, இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வரிசையில் 2012 ஒலிம்பிக் தொடரில் விஜய் குமார், ககன் நாரங் ஆகியோர் பதக்கங்களை பெற்று தந்தனர்.
2012, லண்டன், வெண்கலப்பதக்கம், சாய்னா நேவால், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, பேட்மிண்டன்
கர்ணம் மல்லேஷ்வரியை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் பதக்கம் வென்றது 2012-ம் ஆண்டில்தான். இந்திய வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளித்தது மட்டுமின்றி, பேட்மிண்டன் பக்கம் இளம் வீரர் வீராங்கனைகளை அழைத்துச் சென்றது சாய்னா நேவால்தான்.
2012, லண்டன், வெண்கலப் பதக்கம், மேரி கோம், குத்துச்சண்டை
ஏற்கனவே, சர்வதேச அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனக்கான ஒரு இடத்தை பதிவு செய்திருந்த மேரி கோமிற்கு, ஒலிம்பிக் பதக்கமும் தன்வசம் வந்து சேர்ந்தது.
2012, லண்டன், வெள்ளிப்பதக்கம், சுஷில் குமார், ஆண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு, மல்யுத்தம்
2012, லண்டன், வெண்கலப் பதக்கம், யோகேஷ்வர் தத், ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு, மல்யுத்தம்
2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் மல்யுத்த வீரர்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. சுஷில், யோகேஷ்வர் ஆகியோர் பதக்கங்களை வென்று தந்தனர்.
2016, ரியோ ஒலிம்பிக்ஸ், வெண்கலப் பதக்கம், சாக்ஷி மாலிக், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவு, மல்யுத்தம்
ஒலிம்பிக் வரலாற்றில், மல்யுத்தம் விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் முறை பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
2016, ரியோ ஒலிம்பிக்ஸ், வெள்ளிப்பதக்கம், பி.வி. சிந்து, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, பேட்மிண்டன்
சாய்னாவும், சிந்துவும் தலா ஒரு பதக்கம் வென்று இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டை அடுத்த கட்டதிற்கு கொண்டு சென்றனர். 2016 ஒலிம்பிக்கில் கரோலினா மரினிடம் தோல்வியடைந்த சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.