Paris Paralympics 2024: பாராலிம்பிஸில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்த, முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் அன்டில் பெற்றுள்ளார்.


 தங்கம் வென்ற சுமித் அன்டில்:


நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆன்டில் திங்களன்று பாரிஸ் விளையாட்டுப் போட்டியில்,  70.59 மீ தூரம் ஏட்டியை எறிந்து பாராலிம்பிக்ஸ் புதிய சாதனையுடன் F64 பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கத்தை வென்றதோடு, தங்கப் பதக்கத்தை தக்கவைத்த முதல் இந்தியர் மற்றும் நாட்டிலிருந்து இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


ஹரியானாவில் உள்ள சோனிபட்டைச் சேர்ந்த 26 வயதான சுமித் அன்டில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் வென்றபோது டோக்கியோவில் 68.55 மீட்டர் ஈட்டி எறிந்து பாராலிம்பிக் சாதனையை நிகழ்த்தினார். அவரது உலக சாதனை 73.29 மீ தூரம் என்பது குறிப்பிடத்தக்கது..






பாரிஸில் வரலாற்றுச் சாதனை:


துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாராவுக்குப் பிறகு பாராலிம்பிக்ஸ் பட்டத்தைக் காப்பாற்றிய இரண்டாவது இந்தியர் அன்டில். . F64 வகை என்பது கீழ் மூட்டுகளில் பிரச்சனைகள் உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது, செயற்கை உறுப்புகளுடன் போட்டியிடுபவர்கள் அல்லது கால் நீள வித்தியாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்.


அவரது ஈட்டி எறிதல் போட்டியில், சுமித் அன்டில் தனது முதல் முயற்சியில் 69.11 மீ. கடந்தார், மேலும்  தனது இறுதி எறிதலில் 70.59 மீ. தூரத்தை எட்டியதால், பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.  இந்த போட்டியில் இலங்கையின் துலான் கொடித்துவக்கு 67.03 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், மிச்சல் புரியன் 64.89 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 


அடுத்தடுத்து தங்கம்:


பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் என்பது டோக்கியோ ஒலிம்பிக்கில் F64 ஈட்டி எறிதல் பிரிவில்  தங்கப் பதக்கத்தை வென்றிருந்த சுமித் ஆண்டிலுக்கு மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கொடுத்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் 68.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் அன்டில் மீண்டும் உலக சாதனை படைத்தார் . பாரீஸ் பாராலிம்பிக்ஸில் 70.59 மீட்டர் தூரம் எறிந்ததன் மூலம் ஆன்டில் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். 


முன்னதாக நேற்று மகளிர் தனிபர் பேட்மின்டன் பிரிவில், இந்திய சார்பில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப்பதக்கமும், மனிஷா வெண்கல பதக்கமும் வென்றனர். ஆடவர் தனிநஒபர் பிரிவில் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். வில்வித்தை போட்டியில், ஷீத்தல் தேவி - ராகேச்த் குமார் ஜோடி வெண்கலம் வென்றது.


தற்போது வரை இந்தியா, பாரிஸ் பாராலிம்பிக்கில், 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை பெற்று 15வது இடத்தில் உள்ளது.