நடைபெற்று வரும் 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 வயதான இவர், மகளிர் 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் டிராக் மற்றும் ஃபீல்ட் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் படைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளதாவது “
"பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் அதே 2024 பாராலிம்பிக் போட்டியில, தனது இரண்டாவது பதக்கத்தை வென்று ப்ரீத்தி பால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்! அவர் இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
இதையடுத்து 2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:
"2024 பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு நல்வாழ்த்துகள். ஆர்வமும், உறுதியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார். இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதிக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.