டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று மோதின. ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஜெர்மனி, இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இதுவரை 5 முறை இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதியுள்ள போட்டிகளில். 1 முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இன்றைய போட்டி முடிவில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போட்டியை வென்று 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்றது. 


41 ஆண்டுகளுக்குப் பிறகு அணி பதக்கத்தை வென்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்தில், ஒவ்வொரு இந்தியரின் நினைவில் பதிந்திருக்கும் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். 






ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்த வெற்றி இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். 





காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மொத்த நாடும் இந்த வெற்றிக்காகப் பெருமிதம் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.





இந்தியாவுக்கான நான்காவது ஒலிம்பிக் மெடலைப் பெற்றுத் தந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி





நடிகர் ஷாருக்கான உற்சாகமான போட்டி எனத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்


 


கிரிக்கெட் வீரர்கள் கௌதம் காம்பீர், விரேந்தர் ஷேவாக் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.