பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கு எதிராக ஒரு 'ஆண்' போட்டியிட அனுமதித்ததற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தலைவர் உமர் கிரெம்லேவ் கூறியுள்ளார்.


இமானே கெலிஃப் ஆண் தான்:


அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதே நேரம் அவர் ஒரு பெண் இல்லை என்றும் ஆண் என்றும் பல்வேறு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த நிலையில், இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஜாஃபர் ஐட் அவுடியா இந்த மருத்துவ அறிக்கையை கைப்பற்றி இருக்கிறார்.


அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் (XY Chromosome) இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.


மேலும், இமானே கெலிஃப்-க்கு உடலின் உட்புறமாக ஆண்களுக்கு இருப்பது போன்ற விதைப்பைகள் இருப்பதும், நுண் ஆண் குறி இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது. இதை அடுத்து ஆண் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்ட ஒருவரை பெண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க வைத்தது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.


மன்னிப்பு கேட்க வேண்டும்:


இந்த நிலையில்,  IBA (சர்வதேச குத்துச்சண்டை சங்கம்) தலைவர் உமர் கிரெம்லேவ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கு எதிராக ஒரு 'ஆண்' போட்டியிட அனுமதித்ததற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எல்லோரும் ஏற்கனவே அறிந்த செய்தி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு ஆணை வைத்து அனைத்து விளையாட்டு விதிகளையும் மீறியுள்ளது. இமானே கெலிஃப் உண்மையில் ஒரு ஆண் என்பதை சோதனைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.


இன்று, பாலினத்தை உயர்த்தும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக, சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் குத்துச்சண்டை இரண்டையும் பாதுகாக்கிறது, தாமஸ் பாக் மற்றும் அவரது குழுவினர் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் உலகளாவிய குத்துச்சண்டை சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கோருகிறேன். தாமஸ் பாக் தான் இதற்கு நேரடிப் பொறுப்பை ஏற்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு எதிராகப் போராடினார் - ஆண்கள் பெண்களுக்கு எதிராகப் போராடினார்.


உலகில் உள்ள அனைத்து குத்துச்சண்டை வீரர்கள் சார்பாக, குத்துச்சண்டை சமூகத்திடமும் அந்த சிறுமிகளிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கோருகிறேன். தாமஸ் பாக் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களே, உங்களின் அதிகாரபூர்வ மன்னிப்புக்காக IBAவில் உள்ள அனைவரையும் போலவே நானும் இப்போது காத்திருக்கிறேன்" என்று கிரெம்லேவ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.