இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இமானே கெலிஃப் வென்ற தங்கப்பதக்கத்தை அவரிடம் இருந்து ஒலிம்பிக் அமைப்பு திரும்பப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.


வெளியான மருத்துவ அறிக்கை:


அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதே நேரம் அவர் ஒரு பெண் இல்லை என்றும் ஆண் என்றும் பல்வேறு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த நிலையில், இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஜாஃபர் ஐட் அவுடியா இந்த மருத்துவ அறிக்கையை கைப்பற்றி இருக்கிறார்.


அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் (XY Chromosome) இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது. மேலும், இமானே கெலிஃப்-க்கு உடலின் உட்புறமாக ஆண்களுக்கு இருப்பது போன்ற விதைப்பைகள் இருப்பதும், நுண் ஆண் குறி இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது. இதை அடுத்து ஆண் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்ட ஒருவரை பெண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க வைத்தது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.


ஹர்பஜன் சிங் வைத்த கோரிக்கை:


இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இமானே கெலிஃப் வென்ற தங்கப்பதக்கத்தை அவரிடம் இருந்து ஒலிம்பிக் அமைப்பு திரும்பப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.





இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒலிம்பிக் பக்கத்தை டேக் செய்து அவரிடம் இருந்து தங்க பதக்கத்தை திரும்ப பெறும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.