பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் நாளை (ஜூலை 26) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் தடம் பதிக்க உள்ளனர். இவர்கள் 329 தங்கபதக்கத்திற்கு மல்லுக்கட்ட இருக்கிறார்கள். இந்த பிரமாண்ட போட்டிக்காக பிரான்ஸ் 83 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் பாரீஸ் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 


அந்தவகையில் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் கயாக் கிராஸ் என்ற போட்டி விளையாடப்பட உள்ளது. இந்த போட்டி தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


கயாக் கிராஸ்:


கயாக் கிராஸ் என்று அழைக்கப்படக்கூடிய இந்த விளையாட்டு இந்த முறை தான் ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது வேகமாக ஓடும் நீரில் வீரர்கள் கடந்து செல்ல வேண்டும். இதில் வீரர்கள் நீரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை கடந்து சிறிதாக இருக்கும் படகில் செல்ல வேண்டும். ஒவ்வொரு தடகள வீரரும் கீழ்நோக்கி நகரும் ஆறு வாயில்கள் மற்றும் மேல்நோக்கி அமைந்துள்ள இரண்டு வாயில்களை உள்ளடக்கிய ஒரு வழியில் செல்ல வேண்டும்.வாயில்களில் ஒன்றைத் தவறவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவாகள் 


கயாக் கிராஸில் பந்தய வீரர்கள் கயாக் ரோலை முடிக்க வேண்டும், படகுடன் 360 டிகிரி தண்ணீரில் சுழன்று மீண்டும் நிமிர்ந்து எழ வேண்டும். நடப்பு உலக சாம்பியனான, கிரேட் பிரிட்டனின் ஜோ கிளார்க், பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடுவார். அதேபோல் இவருக்கு கடும் போட்டியாக இருக்கும் வீரராக ராய்ட்டர்ஸ் படி அறியப்படுகிறார். 


 


மேலும் படிக்க: Watch Video: புதிய கேப்டன் சூர்யகுமார்.. பதட்டத்தில் இருந்த ரசிகர்கள்! ஜில் செய்த ஹர்திக் பாண்டியா


 


மேலும் படிக்க: Mohammed Shami: 19வது மாடி.. அதிகாலை 4 மணி! தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி! நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்