Paris Olympics 2024 Matches Today, august 4th: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். ஏழு நாட்களுக்கான போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதன்படி, 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 14 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 12 தங்கம் உட்பட 41 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 54வது இடத்தை பிடித்துள்ளது.
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | சீனா | 16 | 12 | 9 | 37 |
2 | அமெரிக்கா | 14 | 24 | 23 | 61 |
3 | ஃப்ரான்ஸ் | 12 | 14 | 15 | 41 |
4 | ஆஸ்திரேலியா | 12 | 8 | 7 | 27 |
5 | இங்கிலாந்து | 10 | 10 | 13 | 33 |
6 | தென்கொரியா | 9 | 7 | 5 | 21 |
7 | ஜப்பான் | 8 | 5 | 9 | 22 |
8 | இத்தாலி | 6 | 8 | 5 | 19 |
9 | நெதர்லாந்து | 6 | 4 | 4 | 14 |
10 | கனடா | 4 | 4 | 7 | 15 |
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி (லக்ஷயா சென்) | மதியம் 12 மணி முதல்
கோல்ஃப்: ஆண்கள் சுற்று 4 (சுபங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லர்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஆண்கள் குவால்|நிலை 1 (அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: ஸ்கீட் பெண்களுக்கான தகுதி (மகேஸ்வரி சவுகான்) | மதியம் 1 மணி முதல்
ஹாக்கி: ஆண்கள் காலிறுதி (இந்தியா - இங்கிலாந்து) | மதியம் 1:30 மணி முதல்
தடகளம்: பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1 (பருல் சவுத்ரி) | மதியம் 1:35 மணி முதல்
தடகளம்: ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி (ஜெஸ்வின் ஆல்ட்ரின்) | மதியம் 2:30 மணி முதல்
குத்துச்சண்டை: பெண்களுக்கான 57 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 2:30 மணி முதல்
குத்துச்சண்டை: பெண்களுக்கான 75 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | பிற்பகல் 3:02 முதல்
குத்துச்சண்டை: பெண்களுக்கான 54 கிலோ அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 3:34 மணி முதல்
படகோட்டம்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 7|8 (விஷ்ணு சரவணன்) | மாலை 3:35 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஆண்கள் குவால்|நிலை 2 (அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து) | மாலை 4:30 மணி முதல்
படகோட்டம்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 7|8 (நேத்ரா குமணன்) | மாலை 6:05 மணி முதல்