Paris Olympics 2024 Matches Today, august 6th: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் காண்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். முதல் இடத்தை பிடிப்பதில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறதுஹ். இதனிடையே, ஒன்பது நாட்களுக்கான போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் சீனா தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.
அதன்படி, 21 தங்கம், 18 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 20 தங்கம் உட்பட 78 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 13 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 60வது இடத்தை பிடித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | சீனா | 21 | 18 | 14 | 53 |
2 | அமெரிக்கா | 20 | 30 | 28 | 78 |
3 | ஆஸ்திரேலியா | 13 | 11 | 8 | 32 |
4 | ஃப்ரான்ஸ் | 12 | 16 | 19 | 47 |
5 | இங்கிலாந்து | 12 | 13 | 17 | 42 |
6 | தென்கொரியா | 11 | 8 | 7 | 26 |
7 | ஜப்பான் | 10 | 5 | 11 | 26 |
8 | இத்தாலி | 9 | 10 | 6 | 25 |
9 | நெதர்லாந்து | 7 | 5 | 7 | 17 |
10 | ஜெர்மனி | 7 | 5 | 4 | 16 |
இந்தியா Vs ஜெர்மனி:
ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதைதொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்ற நிலையில், இந்த முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதன்படி, இன்றைய போட்டிய்ல் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய, நீரஜ் சோப்ராவும் இன்று நடைபெற உள்ள, ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் களம் காண உள்ளார்.
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் அணி சுற்று 16 | மதியம் 1:30 மணி முதல்
தடகள: ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி (நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா) | மதியம் 1:50 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 68கிலோ ரெபெசேஜ் (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 2:30 மணி முதல்
தடகளம்: பெண்களுக்கான 400மீ ரெபெசேஜ் சுற்று (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 2:50 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 50 கிலோ சுற்று 16 (வினேஷ் போகட்) | மாலை 3 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 50 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 4:20 மணி முதல்
ஹாக்கி: ஆண்கள் அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு10:30 மணி முதல்