Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டு நாட்களுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்க பட்டியல் நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, நான்கு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. 4 தங்கம் உட்பட 6 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களுடன் அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா ஒரே ஒரு வெண்கல பதக்கத்துடன் 22வது இடத்தை பிடித்துள்ளது.
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | ஜப்பான் | 4 | 2 | 1 | 7 |
2 | ஆஸ்திரேலியா | 4 | 2 | 0 | 6 |
3 | அமெரிக்கா | 3 | 6 | 3 | 12 |
4 | ஃபிரான்ஸ் | 3 | 3 | 2 | 8 |
5 | தென்கொரியா | 3 | 2 | 1 | 6 |
6 | சீனா | 3 | 1 | 2 | 6 |
7 | இத்தாலி | 1 | 2 | 3 | 6 |
8 | கஜகஸ்தான் | 1 | 0 | 2 | 3 |
9 | பெல்ஜியம் | 1 | 0 | 1 | 2 |
10 | ஜெர்மனி | 1 | 0 | 0 | 1 |
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் குழு நிலை (எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென்), பெண்கள் ஒற்றையர் குழு நிலை (பி.வி. சிந்து), ஆண்கள் இரட்டையர் குழு நிலை (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி), பெண்கள் இரட்டையர் குழு நிலை (தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா) | மதியம் 12 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: ட்ராப் ஆண்கள் தகுதி (பிரித்விராஜ் தொண்டைமான்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி தகுதி (சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா, மனு பாக்கர், ரிதம் சங்வான்) | மதியம் 12:45 முதல்
துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் ரைபிள் மகளிர் இறுதிப் போட்டி (ரமிதா ஜிண்டால்) | மதியம் 1 மணி முதல்
வில்வித்தை: ஆண்கள் அணி சுற்று 16 (பி. தீராஜ், தருணீப் ராய், பிரவின் ஜாதவ்) | மதியம் 1 மணி முதல்
படகோட்டுதல்: ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் அரையிறுதி E/F | மதியம் 1 மணி முதல்
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) சுற்று 64 & 32 | மதியம் 1:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் ரைபிள் ஆண்களுக்கான இறுதிப் போட்டி (அர்ஜுன் பபுதா) | மாலை 3:30 மணி முதல்
ஹாக்கி: ஆண்கள் குழு B | இந்தியா v அர்ஜென்டினா | மாலை 4:15 மணி
வில்வித்தை: ஆண்கள் அணி அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) (தீரஜ் பொம்மதேவரா, தருணீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ்) | இரவு 7:17 மணி முதல்
வில்வித்தை: ஆண்கள் அணி வெண்கலப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 8:18 மணி முதல்
வில்வித்தை: ஆண்கள் அணி தங்கப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) (தீரஜ் பொம்மதேவரா, தருணீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ்) | இரவு 8:41 மணி முதல்