பாரீஸ் ஒலிம்பிக் 2024:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை பிரான்ஸ் இந்த முறை நடத்த உள்ளது. அதன்படி வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போட்டிகளில் மிக முக்கியமானது ஒலிம்பிக் தொடர். இதில் இந்த முறை 10,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32 க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா எத்தனை தங்கப்பதங்கங்களை வென்றிருக்கிறது என்பதை பார்ப்போம்:


கடந்த 1990 களில் இருந்து 2023 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்கு 35 பதக்கங்கள் கிடைத்திருக்கிறது. இதில் 10 தங்கப்பதக்கங்கள் அடக்கம்.


இந்திய ஹாக்கி அணி:


மற்ற நாடுகள் எல்லாம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை அள்ளிக்குவித்து கொண்டிருக்க இந்தியாவிற்கு மட்டும் பதக்கங்கள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அத்தனை கோடி இந்தியர்களின் கனவும் என்றாவது ஒரு நாள் நம் நாடு தங்கப்பதக்கம் ஒன்றை வென்றுவிடாதா என்ற ஏக்கம் இருந்தது.


இந்த ஏக்கத்தை முதல்முறையாக தீர்த்து வைத்தது இந்திய ஹாக்கி அணிதான். கடந்த 1900 ஆம் ஆண்டு ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றும் ஆண்கள் 200 மீட்டர் தடை ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இந்தியா இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றிருந்தது.


ஆனால் இந்திய அணி முதல் தங்கப்பதக்கத்தை வென்றதோ 1928 ஆம் ஆண்டு. 16 பேரை கொண்ட இந்திய ஹாக்கி அணியில் 9 ஆங்கிலோ இந்தியர்களும் - 7 இந்திய வீரர்களும் அந்த அணியில் இருந்தனர். இதில் இந்திய ஹாக்கி போட்டிகளின் தந்தை என்று போற்றக்கூடிய தியான் சந்தும் இருந்தார். 


கேப்டன் ஜெய்பால் சிங்கின் தியாகம்:


அசாத்திய திறமையை கொண்ட இந்திய அணி தங்களது வீரர்களுடன் நெதர்லாந்து நாட்டிற்கு  பயணம் செய்தது. ஜெய்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெய்பால் சிங் அந்த சமயம் ஜெய்பால் பிரிட்டனில் இந்திய சிவில் சர்வீசஸ் (ஐசிஎஸ்) படித்துக்கொண்டிருந்தார்.


அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் அவருக்கான அழைப்பை இந்திய அணி முறைபப்படி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடையே லண்டலின் இருந்தே ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கிச் சென்றா ஜெய்பால். படிப்பை பாதியில் விட்டு சென்ற அவர் தங்கப்பதக்கத்தை வென்று வந்து மீண்டும் படிப்பைத் தொடங்கினார். அதன்படி இந்திய ஹாக்கி அணியிலும் கலந்து கொண்டார். 


ஆம்ஸ்டர்டாமில் இந்தியா தனது முதல் ஒலிம்பிக் ஹாக்கி தங்கத்தை வென்றது எப்படி?


1928 ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்றன. இந்தியா, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய அணிகள் ஏ பிரிவில் டிராவும், நெதர்லாந்து அணிகள் பி பிரிவில் இடம் பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெற்றவர்கள் தங்கப் பதக்கத்திற்காக நேருக்கு நேர் மோதினர், இரண்டாவது இடம் பிடித்த அணிகள் வெண்கலத்திற்காக விளையாடின.


இந்தியாவின் அறிமுகப் போட்டியில் தியான் சந்த் உலக ஹாக்கியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். அசாத்திய திறமைகளை கொண்ட இந்திய அணி தங்களை எதிர்த்து நின்ற அணிகளை எல்லாம் துவம்சம் செய்தது.


லீக் சுற்றில் 4 ஆட்டங்களில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் மொத்தம் 26 கோல்கள் அடித்த இந்தியா, தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது.  5 ஆட்டத்தில் 14 கோல்கள் பொழிந்த தியான்சந்தை ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்று அப்போதைய இதழ்கள் எழுதின. 


செய் அல்லது செத்துமடி:


தங்கத்தை வென்று இந்தியா திரும்பியது ஹாக்கி அணி. அப்போது ஊடகம் ஒன்றில் பேசிய தியான் சந்த, “நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், மேலும் அதிக வெப்பநிலையில் விளையாட்டு முழுவதும் நீடித்தது. அன்று, எங்கள் மேலாளர் ஏபி ரோஸர் எங்களுக்காக ஒரு முழக்கத்தை உருவாக்கினார்


”செய் அல்லது செத்து மடி” என்று சொன்னார்.  நான் தொழிலில் ஒரு சிப்பாயாக இருந்தேன், நாட்டின் கவுரவம் ஆபத்தில் இருந்தபோது, ​​போர்க்களத்தில் தைரியமாக அணிவகுப்பதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. வெல்வது ஒன்றே இலக்கு, ” என்று கூறியிருந்தார் தியான்சந்த். அதேபோல் இந்திய அணியின் கோல் கீப்பராக இருந்த ரிச்சர்ட் ஆலன் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் திறன் பட விளையாடினார். 


1928 ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணி :


ஜெய்பால் சிங் முண்டா (கேப்டன்), புரூம் எரிக் பின்னிகர் (துணை கேப்டன்), ரிச்சர்ட் ஜே ஆலன், தியான் சந்த், மைக்கேல் ஏ. கேட்லி, லெஸ்லி சார்லஸ் ஹம்மண்ட், பெரோஸ் கான், ஜார்ஜ் எரிக் மார்தின்ஸ், ரெக்ஸ் ஏ. நோரிஸ், மைக்கேல் இ.ரோக், ஃபிரடெரிக் எஸ். சீமான், ஷௌகத் அலி, கேஹர் சிங், சையத் முகமது யூசுப், இப்திகார் அலி கான், வில்லியம் ஜேம்ஸ் குட்சிர்-கல்லன்.