பாரீஸ் பாராலிம்பிக் தொடர்:


கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் பாராலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இதில் இந்தியா 3 தங்க பதக்கம், 5 வெள்ளி பதக்கம் மற்றும் 7 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.  


இச்சூழலில் தான் பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் ஒலித்திருக்கிறது.


இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் நித்தேஷ் குமார் விராட் கோலியை தன்னுடைய ரோல் மாடல் என்று அண்மையில் கூறி இருந்தார். இச்சூழலில் தான் நேற்று தங்கப்பதக்கத்திற்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த போட்டியில் நித்தேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்று அசத்தினார்.


இந்தியாவின் ஹீரோ கோலி:


இந்த போட்டியின் போது தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் பாரீஸில் ஒலித்திருக்கிறது. அதாவது, நித்தேஷ் குமார் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த போது போட்டியை வர்ணனை செய்யும் வர்ணனையாளர் விராட் கோலியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.






அதில்,"அவரது ஹீரோ, விராட் கோலி, முன்னாள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அற்புதமான இந்திய கிரிக்கெட் வீரர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விராட் கோலியை ஒரு விளையாட்டு ஹீரோவாகக் கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்," என்று வர்ணனையாளர் வீடியோவில் கூறுவதைக் கேட்கலாம். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


 


மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன?


 


மேலும் படிக்க: Happy Birthday Mohammad Shami: இந்தியாவின் எல்லைச்சாமி.. முகமது ஷமியின் டாப் 5 பெர்பாமன்ஸ்