பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் சரத் கமலுடன் இணைந்து தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் குழுவை வழிநடத்த ஒலிம்பிக்கில் பதக்கம்
வென்ற ஒருவரை நான் தேடிக்கொண்டிருந்தேன். ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெண் கொடி ஏந்திய வீராங்கனையாக பிவி சிந்து டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஷரத் கமலுடன் வருவார்.


தேசியக்கொடி ஏந்தும் பி.வி.சிந்து:


தொடக்க விழாவில் ஷரத் கமலுடன் இணைந்து பெண் கொடி ஏந்தியவர் டெபிள் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் ஒரே பெண்மணி என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு சிறந்த முடிவுகளை வழங்க எங்கள் விளையாட்டு வீரர்கள் நன்கு தயாராக உள்ளனர் என்று நான் நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.






அதேபோல் நான்கு முறை ஒலிம்பியனும், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங், ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்தியக் குழுவின் தலைவராக செயல்படுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


 


மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!


மேலும் படிக்க: Abhishek Sharma: ரசிகர்களே! அபிஷேக் சர்மா விளையாடுன பேட் யாரோடது தெரியுமா?