பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதங்களை வென்றுள்ளது. அந்தவகையில் 5 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 64வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு:
நீரஜ் சோப்ரா பல முன்னணி பிராண்டு நிறுவனங்களான Gatorade, Tata AIA Life Insuranc, Limca, BYJU'S, Nike, JSW Sports, Britannia மற்றும் Mobil India ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அவரது இந்த ஒப்பந்தங்கள் வருமானத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன. அதன்படி நீரஜ் சோப்ரா 37.6 கோடிகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார்.
அவரது சம்பளம் கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் போட்டி கட்டணத்தில் இருந்து வருகிறது. அதேபோல் பஞ்சாப் மாநில அரசு ரூ.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கியது. அவருக்கு ஹரியானா அரசு ரூ.6 கோடியும், இந்திய ரயில்வே ரூ.3 கோடியும் ரொக்கப் பரிசு வழங்கியது.
கார் கலெக்சன்:
இதுதவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஃபோர்டு மஸ்டாங் ஜிடி, டொயோட்ட ஃபார்ச்சூனர், மஹீந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 போன்ற கார்களை வைத்திருக்கிறார். ஹார்ட்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் மற்றும் பஜாஜ் பல்சர் 220எஃப் போன்ற பைக்குகளையும் வைத்திருக்கிறார். நீரஜ் சோப்ராவின் வருமானத்தில் ஒலிம்பிக் வெற்றிகளை தொடர்ந்து மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பரிசுகளை அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க: Paris Olympics 2024: அர்சாத் நதீமும் என்னுடைய மகன் தான்.. நீரஜ் சோப்ராவின் தாயார் உருக்கம்!
மேலும் படிக்க: Paris Olympics 2024: ஸ்ரீஜேஷ் ஓய்வு..ரசிகையாக சோகம்.. மனைவியாக மகிழ்ச்சி! ஸ்ரீஜேஷின் மனைவி அனீஷ்யா