டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில் நாளை மறுநாள் உடன் நிறைவடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொள்வதற்காக 115  மேற்பட்டவர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளனர். குறிப்பாக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேர்வாகி உள்ள சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் ஓட்டப்பந்தய வீரர் நாகநாதன் உட்பட 11 பேர் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 41ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால் அவர் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்று பதக்கப்பட்டியலில் 65ஆவது இடத்தில் இருந்து வருகிறது. வரும் 8ஆம் தேதியுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியா சார்பில் ஓட தேர்வாகி உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர் நாகநாதன் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ்நாடு காவல்துறையினர் காத்திருக்கின்றனர். 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த சிங்கம்புலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன்பாண்டி, கடந்த 2017ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை ஆயுதப்படை சேர்ந்தார். தடகளப் போட்டிகளில் ஆர்வம் நாகநாதனுக்கு அதீத ஆர்வம் இருந்ததால் பல்வேறு மாநில காவல்துறைக்கு இடையே நடைபெறும் தடகள போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கலந்து கொண்டு நாகநாதன் பாண்டி வெற்றிகளை குவித்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான ஓட்ட பிரிவில் பஞ்சாப் சென்ற நாகநாதன் பாண்டியை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையாராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் உபகரணங்களை கொடுத்து வாழ்த்தி விளையாட்டு வழியனுப்பி வைத்தனர். 



இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தையத்தில் இந்தியா சார்பில் பங்கேற்கும் குழுவில் நாகநாதன் பாண்டி உட்பட 5 பேரின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. 



400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நாகநாதன் பாண்டி தங்கம் வெல்ல காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டேபிள் முதல் டிஜிபி வரை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நாகநாதன் பாண்டிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் நாகநாதன் பாண்டி வெற்றி பெற்று நாடு திரும்ப வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் நாகநாதன் பாண்டியை வாழ்த்துவம் விதமாக பேனர்களை காவலர்கள் வைத்து வருகின்றனர்.