ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் டோக்கியோவிற்கு வந்தடைந்துள்ளனர். இந்தச் சூழலில் அங்கு தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இசையமைக்க இருந்த கியகோ ஒயமாடோ  திடீரென விலகியுள்ளார். இவரை ஒலிம்பிக் மற்றும் அடுத்த மாதம் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு இசையமைக்க ஜப்பான் நியமித்தது. இந்த நியமனத்தை தொடர்ந்து ஒயமாடாவின் முந்தைய பாகுபாடான, தொல்லை தரும் விதமான கொடூர செயல்பாடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் ஆகியவை குறித்து பலரும் சமுக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். குறிப்பாக சில ஆண்டுகளுக்க முன்பாக அவர் குறித்து ஒரு பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.




அதில் சிறுவயதில் ஒயமாடோ தன்னுடன் பயின்ற மாற்றுத்திறனாளிகளை மிகவும் கேவலமாக நடத்தியது தெரியவந்துள்ளது. அதற்கு ஒயமாடாவும்தான் செய்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் இந்த தவறுகள் தொடர்பான விஷயங்கள் வெளியவந்துடன் அவர் தரப்பில் மன்னிப்பும் கோரினார். நேர்காணலில் மன்னிப்புக்கோரியபோது, ”மாணவர்களை மலத்தை சாப்பிடவைத்தேன். மாஸ்டர்பேட் செய்யச்சொல்லி வற்புறுத்தினேன்” என்னும் கொடூர புகார்களை ஒப்புக்கொண்டார். எனினும் இதை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்தச் சூழலில் அவர் தற்போது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு இசையமைக்கும் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 






ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கொரோனா பாதிப்பிற்கு நடுவில் நடப்பதை அந்நாட்டு மக்கள் சிலர் விமர்சனம் செய்து கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் சர்ச்சைக்குரிய பாடகரை நியமித்து ஜப்பான் மேலும் விமர்சனங்களை அதிகரித்துள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு வீரர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ள செய்தி இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.






ஏனென்றால் இந்திய வீரர் வீராங்கனைகளும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்கியுள்ள அதே கட்டிடத்தில்தான் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே கட்டிடத்தில் இந்திய வீரர் வீராங்கனைகள் 11,12 மற்றும் 13ஆவது மாடிகளில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க வீரர்கள் 4,5ஆவது தளத்தில் தங்கியுள்ளதாக தெரிகிறது. ஆகவே இந்திய வீரர் வீராங்கனைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் இரண்டாவது இந்திய தம்பதி தீபிகா - அடானு.. முதல் ஜோடி யார் தெரியுமா?